Close Menu
    What's Hot

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
    Featured

    உதயநிதி கைது: “ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்!”: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    Editor web2By Editor web2August 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    paramakudi stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காவிரி உரிமை மற்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் தோல்வியை மறைப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைத் தமிழக வெற்றி கழக  அரசு அராஜகமாகக் கைது செய்துள்ளதாகவும், முதலமைச்சர் விஜய்யின் தொடர்ச்சியான ஆணவப் போக்கு அழிவை விரைவுபடுத்தும் என்றும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்  கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ” தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், காவிரி நீரைப் பெற முடியாத அரசின் கையாலாகாத்தனத்தையும், ‘ஜோக்கர் அமைச்சரவை’ என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் எழுந்த மக்கள் கொந்தளிப்பையும், அரசின் தோல்வியையும் திசைதிருப்பவே உதயநிதி வீட்டில் வைத்துப் போலீஸாரால் கைது செய்யப்பட்டுத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

    நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் இருப்பதைத் தடுக்கும் நோக்கிலேயே அச்சுறுத்தும் வகையில் பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், நீதிமன்ற உத்தரவால் அரசு பின்வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    “நாடு முழுவதும் கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புக்குப் பிறகு, ‘கைது செய்யும் எண்ணம் இல்லை, விசாரணை முடிந்ததும் விடுவித்துவிடுவோம்’ என்று நீதிமன்றத்தில் த.வெ.க. அரசு வழக்கறிஞர் சொல்லி இருக்கிறார். விசாரணை நடத்துவதுதான் நோக்கம் என்றால் சென்னையிலேயே வைத்து நடத்தி இருக்கலாமே? எதற்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்ல வேண்டும்? எதற்கு ஜாமீனில் விடுவிக்க முடியாத பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்? மக்கள் எதிர்ப்பால் பின் வாங்கியது தெரியாமல் பூசி மெழுகுகிறது அரசு. ‘உதயநிதியை இன்றே விடுதலை செய்ய வேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கி இருக்கும் உத்தரவு, த.வெ.க.வின் பாசிசத் தன்மைக்கு விழுந்த அடி!” என்றும் அவர் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

    மேலும், உதயநிதி தனது உரையில் யாருடைய பெயரையும் குறிப்பிட்டு ஆபாசமாகப் பேசவில்லை என்றும், தவறான பரப்பரப்புகளைச் சரிபார்க்காமல் சில தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    த.வெ.க. ஆட்சியில் அமைச்சர்களை விமர்சிப்பவர்கள், நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் கைது செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டி உள்ள மு.க. ஸ்டாலின், ரீல்ஸ் கிரியேட்டராக வலம் வராமல் முதலமைச்சர் விஜய் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

    CauveryIssue mkstalin TVKGovernment UdhayanidhiStalinArrest
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதண்ணில கண்டம்… உதயநிதியை கலாய்க்கும் தவெக ஐ.டி.விங்க்!
    Next Article திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பேரணி: காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
    Editor web2
    • Website

    Related Posts

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    August 4, 2026

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    August 4, 2026

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.