Close Menu
    What's Hot

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்
    தமிழ்நாடு

    உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விதம் ஆபாசமானது, அருவருக்கத்தக்கது – இடதுசாரி தலைவர்கள் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksAugust 4, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    018 cpm
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இடதுசாரி கட்சிகளின் 4 ஆவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று தி.நகரில் அமைந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இடதுசாரி கட்சிகளுடைய மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

    இக்கூட்டத்தில் இடதுசாரி மாற்றுக் கொள்கைகளை முன்வைத்த மாநில அளவிலான ஒரு பேரணியை அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி திருச்சியில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தப் பேரணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல லட்சக்கணக்கான உழைப்பாளி மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்களை திரட்ட உள்ளனர்.

    மேலும் இந்தப் பேரணியில் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகளை தமிழ்நாடு முழுவதும் மக்கள் மத்தியிலே கொண்டு செல்லக்கூடிய வகையில் ஒரு விரிவான கோரிக்கை பிரச்சாரத்தை மேற்கொள்வது என்றும் இந்த கூட்டத்திலே முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

    முன்னதாக இடதுசாரி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன், இன்னொரு விடுதலைப் போர் தேவை எனக் கூறினார்.  முதல் விடுதலைப் போர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து நாட்டை விடுவித்தது. இரண்டாவது விடுதலைப் போர் முதலாளித்துவத்திடமிருந்து இந்த தேசத்தை, சோசலிசத்திற்கு கொண்டு வரக்கூடிய போராட்டமாக இருக்கக்கூடிய காரணிகள், அறிகுறிகள் தென்படுவதாகக் கூறினார்.

    புதிய உலகம், புதிய திசையை நோக்கிப் பயணிப்பதற்கு இடதுசாரிகள் தயாராக இருக்கிறோம். இடதுசாரிகள் மட்டுமே அல்ல, நாட்டின் மீது அக்கறை செலுத்துகிற ஏராளமான ஜனநாயக சக்திகள் இருக்கிறார்கள். அவர்களை இடதுபக்கத்திற்குத் திருப்புகிற மகத்தான முயற்சியில் இடதுசாரிகள் ஈடுபடுவோம் எனவும் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவர் நேற்றைய தினம் பொதுவெளியில் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் அந்த மாதிரி பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

    பொதுவெளியில் எதிர்கட்சித் தலைவர்கள் பேசுகின்றபோது நாகரிகத்தோடு பேச வேண்டும். அரசியல் நாகரிகத்தைப் பின்பற்ற வேண்டும். இத்தகைய முறையில் யார் பேசியிருந்தாலும் பேசியது கண்டிக்கத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் அவருக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்து அவர்கள் பேசியிருக்க வேண்டும் என்றார்.

    பெண்களை இழுத்து இழிவாகப் பேசுவது என்பது நீண்ட காலமாகப் பலர் பேசி வருகிறார்கள். இதற்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதலில் அந்தக், கட்சியை சார்ந்தவர்களை ஒழுங்குபடுத்துவது முதன்மையானது எனத் தெரிவித்தார்.

    இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாருமே இப்படி பேசமாட்டார்கள். அப்படி பேசினால் அவர்களை நாங்கள் கட்சியிலேயே வைத்திருக்கமாட்டோம். அந்த மாதிரியான உறுதியான கொள்கைகள் என்பது மற்றக் கட்சிகளுக்கு இல்லை என்றார்.

    தமிழக வெற்றி கழகத்துக்குள்ளும் இது போன்ற பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உள்ளதே என்னும் கேள்விக்கு,

    எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களைப் பாலியல் ரீதியாகப் பேசுவது, பாலியல் ரீதியில வன்கொடுமைகள் புரிவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவார்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை எனத் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர்,  தமிழக வெற்றிக் கழகம்  தேர்தல் வாக்குறுதிகளின்படி, 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி, மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கூறியது போல பட்ஜெட்டில் அதனை கொண்டு வர வேண்டும் என்றார்.

    Left parties political controversy Public Reaction Tamil Nadu Politics Udhayanidhi Stalin
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“உதயநிதி கைது: நீதிபதி உத்தரவை மீறிய திமிர்த்தனமான நடவடிக்கை”- திமுக காட்டம்
    Next Article உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: மாஸ்கோ பகுதியில் 5 பேர் உயிரிழப்பு; 320 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யா தகவல்
    Editor TN Talks

    Related Posts

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    August 4, 2026

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    August 4, 2026

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நதிநீர்ச்சிக்கலில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? – சீமான் கேள்வி

    பாடப்புத்தகத்துக்கு கை, கால் முளைத்தால் அது வைகோ… அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்

    ’82 வயதிலும் வாழ்க்கையையும் அரசியலையும் கற்றுக்கொண்டே இருக்கிறார் வைகோ’ – ராகுல் காந்தி பாராட்டு

    டிஜிட்டல் கைது மோசடிகளுக்கு கடும் கட்டுப்பாடு….  உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள்

    “போராட்டம் என்ற பெயரில் திமுகவின் அராஜகம்!”: வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.