Close Menu
    What's Hot

    ‘நீங்கள் என்ன பண்ணீங்க?’ – மேகதாது விவகாரத்தில் ஆதவ் கேள்விக்கு கே.என். நேருவின் பதில்!

    பெங்களூரு விசிட் விவகாரம்.. உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?

    பீகார் : உடைந்த காலுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்..! அட்டைப் பெட்டியால் கட்டுப்போட்ட மருத்துவர்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்..! ‘Fair Delimitation’ வேண்டும்..! திமுக உறுதி..!
    Featured

    தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்..! ‘Fair Delimitation’ வேண்டும்..! திமுக உறுதி..!

    Editor web4By Editor web4August 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    6 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டின் நலனையும், நம் மாநிலத்திற்குரிய பிரதிநிதித்துவத்தையும் பாதிக்காத வகையில் ‘Fair Delimitation’ மேற்கொள்ள வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் தி.மு.க. இப்போதும் உறுதியாக இருக்கிறது. எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், தடுமாற்றமும் இல்லை.

    நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் அலுவல் அட்டவணையில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்று தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லும் தகுதி எந்தக் கட்சிக்கும் இல்லை. முறையற்ற தொகுதி மறுசீரமைப்பால் இந்திய அளவில் ஏற்படவுள்ள ஆபத்தை முதன்முதலாக எடுத்துரைத்து, அதற்கெதிரான வலுவான கருத்தை உருவாக்கி, ஒருமித்த குரல்களை ஒன்றிணைத்ததே தி.மு.க.வும் எங்கள் கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களும்தான் என்பதை நாடறியும்.

    சென்னையில் இதற்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, பாதிப்புக்குள்ளாகும் அனைத்து மாநிலங்களையும் ஓரணியில் திரட்டி, இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்து, இந்த விவகாரம் குறித்து தேசிய அளவில் விவாதிக்க வைத்தோம்.

    இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் இருந்தபோதே, “தேர்தல் கூட எங்களுக்குப் பிறகுதான்; தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் அமைந்திருக்கும் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்ப்பதுதான் எங்களது முதல் பணி” எனப் பிரகடனம் செய்து, தமிழ்நாட்டில் உள்ள இல்லங்களின் முன் கருப்புக் கொடியேற்ற அழைப்பு விடுத்து, அந்தச் சட்டமுன்வரைவின் நகலை எரித்து எதிர்ப்புக் காட்டியவர்தான் எங்கள் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.

    எனவே, இவற்றின் அடிப்படையில், தற்போதைய அரசு ஆகஸ்ட் 8 அன்று அழைப்பு விடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டத்திலும் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்துகொண்டு, எங்களது கருத்தைத் தெரிவிப்பதில் எங்களுக்குத் தயக்கம் இல்லை.

    ஆனால், அதற்கு முன்பாக, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முனைப்புக் காட்டும் விவகாரம் குறித்து விவாதிக்கவும், தமிழ்நாட்டிலுள்ள கட்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்ற நிபந்தனையைத் தமிழ்நாடு அரசிடம் திராவிட முன்னேற்றக் கழகம் முன்வைக்கிறது.

    புதுக் கூட்டாளியான காங்கிரசின் மனம் புண்படும் என்பதால் மேகதாது விவகாரத்தில் கள்ள மவுனம் காத்துக்கொண்டு, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதா தொடர்பாக மட்டும் கூட்டம் கூட்டுவதை ஏற்க முடியாது!

    தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ உரிமை பாதிக்கப்படக் கூடாது; பாதிக்கப்பட்டால் அதைத் தடுக்கும் முன்னணிப் படையாகக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான தி.மு.க. இருக்கும். அதேநேரத்தில், இன்றைய சூழலில் காவிரி உரிமையை மீட்பதும், மேகதாது அணையைத் தடுப்பதும் மிக மிக முக்கியமானவை. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உணர்வை வெளிப்படுத்த வேண்டிய அவசிய அவசரம் இப்போது எழுந்துள்ளது. இந்த நேரத்தில் த.வெ.க. அரசு ‘டேக் டைவர்ஷன்’ அரசியலை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதூத்துக்குடி : கலைஞர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம்..! அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் மரியாதை..!
    Next Article தேசிய கைத்தறி தினம்..! கொண்டாட வாருங்கள்..! பிரதமர் மோடி அழைப்பு..!
    Editor web4

    Related Posts

    ‘நீங்கள் என்ன பண்ணீங்க?’ – மேகதாது விவகாரத்தில் ஆதவ் கேள்விக்கு கே.என். நேருவின் பதில்!

    August 7, 2026

    பெங்களூரு விசிட் விவகாரம்.. உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?

    August 7, 2026

    பீகார் : உடைந்த காலுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்..! அட்டைப் பெட்டியால் கட்டுப்போட்ட மருத்துவர்..!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘நீங்கள் என்ன பண்ணீங்க?’ – மேகதாது விவகாரத்தில் ஆதவ் கேள்விக்கு கே.என். நேருவின் பதில்!

    பெங்களூரு விசிட் விவகாரம்.. உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில் என்ன?

    பீகார் : உடைந்த காலுடன் சிகிச்சைக்கு வந்த இளைஞர்..! அட்டைப் பெட்டியால் கட்டுப்போட்ட மருத்துவர்..!

    நீலகிரி : குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த காட்டு யானைகள்..! பொதுமக்கள் அச்சம்..!

    தூத்துக்குடி : கடல் வழியாக கடத்தப்பட்ட ரூ.10லட்சம் மதிப்பிலான வெள்ளாடுகள்..! சுற்றி வளைத்து பிடித்த கியூ பிரிவு போலீசார்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.