Close Menu
    What's Hot

    பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!
    தமிழ்நாடு

    திட்டங்களின் பெயர் மாற்றம் காலம் காலமாக நடப்பதுதான்!. தொல். திருமாவளவன்!

    Editor web3By Editor web3August 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    022 thiruma
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடலூர் முதுநகர் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டி மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு அரசியல் நிலவரங்கள் குறித்துப் பதிலளித்தார்.

    அப்போது பேசிய அவர், பிறமொழி பேசும் தேசிய இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைப் பேணுவதுடன் மாநில சுயாட்சிக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 17 அன்று மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். தமிழ் தேசியம் என்பது பிற மொழி பேசுவோருக்கு எதிரான வெறுப்பு அரசியல் அல்ல என்றும், மொழி மற்றும் மாநில உரிமைகளை வென்றெடுப்பதே விசிக-வின் தமிழ் தேசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறைச் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முதல்வர் தலைமையில் நாளை நடைபெறும் அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் விசிக கலந்துகொள்ளும் என்று அவர் கூறினார். மேலும், மாநிலங்களுக்குப் போதுமான நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தை விசிக வரவேற்றுப் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.

    திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதும், அவற்றை மற்றொரு அரசு மாற்றுவதும் அரசியல் சூழல்களில் காலம் காலமாக நடந்து வருபவைதான் என்று குறிப்பிட்ட அவர், புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆவதால் அடுத்தடுத்த பட்ஜெட்டுகளில் திட்டங்கள் முறையாக நிறைவேறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

    காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது நல்லது என்பதை விசிக முன்பே வலியுறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டினார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டத்தில் திமுக பங்கேற்பது அவசியமான ஒன்று என்று தெரிவித்த திருமாவளவன், திமுக கூட்டணியில் விசிக தொடர்கிறதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

    Cauvery Issue Renaming schemes Thol Thirumavalavan VCK vck thiruma
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“கர்நாடகாவிடமிருந்து காவிரி நீரைப் பெறுவது சவாலாக உள்ளது” – அமைச்சர் ஆனந்த்
    Next Article சமூகநீதி, மனிதநேயத்துக்கு எதிராக தவெக அரசின் அணுகுமுறை ஆபத்தானது!. அன்புமணி சாடல்!
    Editor web3
    • Website

    Related Posts

    பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!

    August 7, 2026

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    August 7, 2026

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    August 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பள்ளியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி!. தாய்லாந்தில் பயங்கரம்!

     முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு மீண்டும் சிக்கல்!. கெடு விதித்த ஐகோர்ட்!

    கால்நடை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வேண்டாம்!. பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    மாதம் ரூ.2,500 எங்கே.?. எங்களிடம் எல்லோரும் கேட்கிறார்கள்?. பாமக எம்.எல்.ஏ கணேஷ் குமார்!.

    பதவி விலகிய பசவராஜ் ஹொரட்டி.. ‘ராஜினாமா செய்ய காங்கிரஸ் கேட்டது’ என பரபரப்பு பேட்டி!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.