வேலூர்மாவட்டம், கேவிக்குப்பம் அருகே ஆந்திர வனப்பகுதியை ஒட்டியுள்ள காங்குப்பம் பகுதிக்கு நேற்று நள்ளிரவு காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தது. விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த வனத்துரையினர், பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை மீண்டும் வனபகுதிகளுக்குள் துரத்தினர். ஆந்திர பகுதியிலிருந்து அடிக்கடி காட்டு யானைகள் கிறிஸ்டியான்பேட்டை, லத்தேரி, பனமடங்கி, பேர்ணாம்பட்டு போன்ற பகுதிகளில் தொடர்ந்து உலா வருவதுடன் பயிர்களை சேதப்படுத்துவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
