Close Menu
    What's Hot

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    தவெகவினருக்கு சிக்கல்.. ஆன்லைன் பண மோசடி வழக்கில் 3 பேர் கைது! ரூ.200 கோடி பின்னணியா?

    உத்தரகண்டில் வீடு கட்டும் கனவு!. நள்ளிரவில் ரிஷப் பந்த் விடுத்த கோரிக்கை!. பச்சைக்கொடி காட்டிய முதல்வர்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போன் செய்து மிரட்டும் வசூல் ஏஜென்ட்களுக்கு செக்.. ஆர்பிஐ புதிய விதிகள்!!
    Featured

    போன் செய்து மிரட்டும் வசூல் ஏஜென்ட்களுக்கு செக்.. ஆர்பிஐ புதிய விதிகள்!!

    editor5By editor5August 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    image 15 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடன் தவணை தாமதமானதால் இரவு நேர அழைப்புகள், குடும்பத்தினருக்கு தொல்லை, அண்டை வீட்டாரிடம் அவமானம், மிரட்டல் போன்ற அனுபவங்கள் பல இந்தியக் கடனாளிகளுக்குப் பரிச்சயமானவை. ஆப் லோன், கிரெடிட் கார்டு உள்ளிட்ட கடன்களில் சரியான நேரத்தில் பணம் செலுத்தாத போது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வசூல் முகவர்கள் கடுமையாக நடந்து கொள்வதாக ஏராளமான புகார்கள் ரிசர்வ் வங்கிக்கு வந்தன.

    இத்தகைய கொடுமைகளால் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்தப் பின்னணியில், கடன் வசூலில் கடனாளியின் கண்ணியம், அந்தரங்கம் மற்றும் உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகின்றன.

    வங்கிகள், என்பிஎஃப்சிகள் உள்ளிட்ட அனைத்து ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களுக்கும் இவை பொருந்தும். புதிய விதிகளின்படி, முகவர்கள் அல்லது வங்கி ஊழியர்கள் பயமுறுத்தல், மிரட்டல், ஆபாச மொழி பயன்படுத்துதல், சமூக ஊடகங்களில் கடனாளியின் தனிப்பட்ட விவரங்களைப் பதிவிடுதல், குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது சக ஊழியர்களைத் தொடர்புகொண்டு தொல்லை தருதல், பொதுவெளியில் அவமானப்படுத்துதல் அல்லது தவறான தகவல்களைக் கூறுதல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது.

    தொடர்பு கொள்ளும் நேரம் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே. கடனாளி கேட்டுக்கொண்டால் மட்டுமே இந்த நேரத்தைத் தாண்ட அனுமதி. குடும்ப இறப்பு, மருத்துவ அவசரம் அல்லது திருமணம் போன்ற சூழல்களில் தொடர்பு தவிர்க்கப்பட வேண்டும். நேரில் சந்திப்பு கடனாளி விரும்பும் இடத்திலேயே நடைபெற வேண்டும். தொடர்ந்து இரண்டு முறை வரத் தவறினால் மட்டுமே வீடு அல்லது அலுவலகத்திற்குச் செல்லலாம். அதற்கு குறைந்தபட்சம் ஒரு நாள் முன்பே அறிவிப்பு தர வேண்டும். முகவர் அடையாள அட்டை மற்றும் வங்கியின் அனுமதிக் கடிதத்தைக் கட்டாயம் காட்ட வேண்டும்.

    வெளி முகவர்களிடம் ஒப்படைத்தாலும் அவர்களின் நடத்தைக்கு வங்கியே முழுப் பொறுப்பு. அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்பட்டு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். வன்முறையைத் தூண்டும் கடுமையான இலக்குகள் அல்லது ஊக்கத்தொகை திட்டங்கள் தடை. IIBF மூலம் பயிற்சி பெற்ற சான்றிதழ் பெற்ற முகவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

    விதி மீறலால் பாதிப்பு ஏற்பட்டால் கடனாளி நஷ்டஈடு பெற உரிமை உண்டு. கடன் ஒப்பந்தத்திலேயே புகார் அதிகாரியின் விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். இந்த நடவடிக்கை முறையற்ற வசூல் முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கடனாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    banks loans rbi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தவெக அரசு நடத்தும் கூட்டத்தில் திமுக பங்கேற்காது”!. கனிமொழி எம்.பி. திட்டவட்டம்!
    Next Article திமுக புறக்கணிப்பு; அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் பங்கேற்காமல் இருப்பதே நல்லது!. மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி!
    editor5

    Related Posts

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    August 8, 2026

    தவெகவினருக்கு சிக்கல்.. ஆன்லைன் பண மோசடி வழக்கில் 3 பேர் கைது! ரூ.200 கோடி பின்னணியா?

    August 8, 2026

    உத்தரகண்டில் வீடு கட்டும் கனவு!. நள்ளிரவில் ரிஷப் பந்த் விடுத்த கோரிக்கை!. பச்சைக்கொடி காட்டிய முதல்வர்!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.60 கோடி நில பத்திரப்பதிவு மோசடி.. மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது!!

    தவெகவினருக்கு சிக்கல்.. ஆன்லைன் பண மோசடி வழக்கில் 3 பேர் கைது! ரூ.200 கோடி பின்னணியா?

    உத்தரகண்டில் வீடு கட்டும் கனவு!. நள்ளிரவில் ரிஷப் பந்த் விடுத்த கோரிக்கை!. பச்சைக்கொடி காட்டிய முதல்வர்!

    சொத்து வாங்கப் போகிறீர்களா? தமிழகத்தில் நில வழிகாட்டி மதிப்பு உயர்வு! அரசு அதிரடி!!

    உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்? தீயாய் பரவும் தகவல்!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.