Close Menu
    What's Hot

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»சினிமா»கண்ணதாசன் மகனுக்கு இந்த நிலைமையா? மின்சாரம் தர மறுக்கும் மின்வாரியம்… பின்னணி கதை இதுதான்…
    சினிமா

    கண்ணதாசன் மகனுக்கு இந்த நிலைமையா? மின்சாரம் தர மறுக்கும் மின்வாரியம்… பின்னணி கதை இதுதான்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 05 09 at 3.30.25 PM
    கண்ணதாசன் மகனுக்கு இந்த நிலைமையா? மின்சாரம் தர மறுக்கும் மின்வாரியம்...
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வீட்டுக்கு மின் இணைப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து கவிஞர் கண்ணதாசனின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு, சென்னை மாடம்பாக்கம் பகுதியில் ஒரு ஏக்கர் 72 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனது வாரிசுகளுக்கு அவர் பிரித்து கொடுத்திருந்தார்.

    இந்த நிலத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த துணை மின் நிலையத்துக்கு அருகில் காலியாக இருந்த பகுதியை கவிஞர் கண்ணதாசன் குடும்பத்தினர் பாதையாக பயன்படுத்தி வந்தனர்.

    இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால், கண்ணதாசனின் மகன்கள் தரப்பில் தொடர்பட்ட வழக்கில், துணை மின் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை பாதையாக பயன்படுத்த அனுமதியளித்து தாம்பரம் நீதிமன்றம் கடந்த 2011 ம் ஆண்டு உத்தரவிட்டது.

    இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு கேட்டு அண்ணாதுரை கண்ணதாசன் விண்ணப்பித்திருந்தார்

    ஆனால், மின்வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்துவதாகக் கூறி, மின்சார வாரியம், மின் இணைப்பு வழங்க மறுத்தது.

    இதை எதிர்த்து அண்ணாதுரை கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

    இந்த வழக்கு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தபோது, கவிஞர் கண்ணதாசன் மகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஏற்கனவே பாதையை பயன்படுத்த தாம்பரம் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதால், மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் வாதிட்டார்.

    மேலும் நீதிமன்ற உத்தரவின் படி துணைமின் நிலையம் அருகே உள்ள நிலத்தை பாதையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரினார்

    இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

     

     

    kannadhasan Poet Kannadasan poet Kannadasan's son Annadurai கவிஞர் கண்ணதாசன் கவிஞர் கண்ணதாசன் மகன் அண்ணாதுரை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோர்ச் செய்திகளில் நேரலை கூடாது… செய்தி நிறுவனங்களுக்கு உத்தரவு …
    Next Article இனி நாம் போகப்போவது சிங்கப்பாதை.. திருச்சியில் கர்ஜித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
    Editor TN Talks

    Related Posts

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    May 30, 2026

    நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்..!!

    May 30, 2026

    குஷ்பு வீட்டில் டும்டும்டும் – பிரதமருக்கு நேரில் அழைப்பு

    May 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    புதுச்சேரி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் விமர்சை!

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    தாஜ்மஹாலை கணவருடன் கண்டு ரசித்த டிரம்ப் மகள்!.

    கல்லூரி, பல்கலைக் கழகங்களுக்குள் நுழையும் தவெக – மாணவர் பேரவை தேர்தல் நடத்த திட்டம்!

    ரசிகர்களுக்கு அதிர்ச்சி!. கைவிடப்பட்டதா ‘பிரேமலு 2’?. நடிகர் நஸ்லென் விளக்கம்!

    Trending Posts

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    May 30, 2026

    வைகாசி விசாகம் கோலாகலம்: பழனியில் குவிந்த பக்தர் கூட்டம்!

    May 30, 2026

    “ஊழலை சுட்டிக்காட்டுங்கள்; புகார்கள் உண்மையானால் நேரடி நடவடிக்கை!. அமைச்சர் செங்கோட்டையன்!

    May 30, 2026

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.