Close Menu
    What's Hot

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு.. காரணம் என்ன?
    தமிழ்நாடு

    பயிற்சி முடித்த அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் வழக்கு.. காரணம் என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksMay 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட வேண்டும் என, அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் சங்கத் தலைவர் அரங்கநாதன், உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், “2006ல், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. அதன்படி அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சியில் தேர்ச்சி பெற்றாலும், இதுவரை எங்களுக்கு பணி நியமனம் கிடைக்கவில்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணைக்கு எதிராக, ஆதி சிவாச்சாரியார்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளது.

    அந்த இடைக்கால தடை உத்தரவால், அர்ச்சகர் பயிற்சி பெற்ற நூற்றுக்கணக்கானோர் பணி அமர்த்தப்படவில்லை. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்து அறநிலைய துறை சட்டப்படி, அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு தனிப்பட்ட பட்டப்படிப்பு வயது வரம்பு வரையறுக்கப்படவில்லை. அர்ச்சகர் பயிற்சியை முடித்தவர்களை பணி நியமனம் செய்யலாம் என்று விதி உள்ளது.

    இதையும் படிக்க: “குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது..” பொள்ளாச்சி தீர்ப்பு குறித்து நயினார் நாகேந்திரன்!

    ஆனால், முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றும், மூத்த அர்ச்சகர்கள் கீழ் கோயில்களில் பயிற்சி பெற்ற பின்னரும், நாங்கள் அர்ச்சகராக நியமனம் செய்யப்படவில்லை. எனவே, முறையாக பயிற்சி பெற்ற எங்களை தகுதியின் அடிப்படையிலும், இந்து அறநிலையத்துறை நடத்திய தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையிலும் பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். இதற்கு ஏதுவாக, இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடித்து உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். எனவே, இந்த இடையீட்டு மனுவை ஏற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    supreme court அர்ச்சகர்கள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“குற்றவாளிகள் நீதியின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது..” பொள்ளாச்சி தீர்ப்பு குறித்து நயினார் நாகேந்திரன்!
    Next Article சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மகள் பெயரில் போலி கணக்கா?!
    Editor TN Talks

    Related Posts

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    April 6, 2026

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    April 6, 2026

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    April 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    தேர்தலில் இருந்து விலகினார் திமுக வேட்பாளர்!. ஸ்டாலினுக்கு அதிர்ச்சி!

    தமிழக எம்.பி.க்கள் 6 பேர் பதவியேற்பு!. முதல்முறையாக நாடாளுமன்றம் சென்ற சுதீஷ்!

    அடுத்த முதல்வராக ஸ்டாலின் வரவே முடியாது!. பியூஷ் கோயல் பேட்டி!

    வீடியோ காலில் கணவருடன் வாக்குவாதம்!. சென்னையில் சின்னத்திரை நடிகை தற்கொலை!

    Trending Posts

    தமிழ்நாடு தேர்தல்!. இன்று பிற்பகல் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு!.

    April 6, 2026

    தேர்தல் பரபரப்பு!. எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் வேட்பு மனு தாக்கல்!.

    April 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.