Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு ஜாமீன்!
    Featured

    இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகார்.. திமுக முன்னாள் நிர்வாகிக்கு ஜாமீன்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 21, 2025Updated:May 21, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இளம்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகி தெய்வ செயல் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்துகொண்டு வன்கொடுமை செய்துவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும் தன்னை போலவே 20 இளம் பெண்கள் வரை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் பேட்டியளித்திருந்தார்.

    இந்நிலையில், தெய்வச்செயல் மீது நான்கு பிரிவுகளின் கீழ் அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, முன் ஜாமீன்க்கோரி தெய்வச்செயல் மற்றும் அவரது மனைவி கனிமொழி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

    அதில், தனக்கெதிராக புகார் அளித்து பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் அந்த பெண்ணிடம் இருந்து விவகாரத்துக்கோரி அவரது கணவர் மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். விவாகரத்து பெறாத நிலையில் அந்த பெண்னுக்கும், தமக்கும் கரைக்காலில் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி திருமணம் நடைபெற்றதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் தமக்கு எதிராக அந்த பெண் போலீசிலும், சமூக வலைத்தளங்களிலும் பொய் புகாரை அளித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமக்கு எதிரான புகார் குறித்து முறையாக விசாரணை நடத்தினால் உண்மைத் தன்மை தெரியவரும் எனவும் இந்த வழக்கில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தேவையில்லை என்பதால் இருவருக்கும் முன் ஜாமீன் வழங்கவேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தெரிந்துகொள்ள: அரக்கோணம் விவகாரம் : நுழைந்தது தேசிய மகளிர் ஆணையம்…

    இந்த மனு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, புகாரளித்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், முன் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தெய்வசெயல் மற்றும் அவரது மனைவிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

    anticipatory bail Arakkonam assault case Deivasel divorce DMK false complaint former functionary High Court Judge Senthilkumar Kanimozhi Marriage petition filed police investigation sexual complaint social media women police station அரக்கோணம் உயர் நீதிமன்றம் கனிமொழி சமூக வலைத்தளம் திமுக திருமணம் தெய்வசெயல் நீதிபதி செந்தில்குமார் பாலியல் புகார் பொய் புகார் போலீஸ் விசாரணை மகளிர் போலீஸ் மனுத்தாக்கல் முன் ஜாமீன் முன்னாள் நிர்வாகி வன்கொடுமை விவாகரத்து
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகணவர் மீது சந்தேகம்… ஃபேக் ஐடி மூலம் கண்காணித்த மனைவி கைது…
    Next Article துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரம்.. இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்!
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.