Close Menu
    What's Hot

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»டாஸ்மாக் ரூ.1,000 கோடி முறைகேடு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…
    தமிழ்நாடு

    டாஸ்மாக் ரூ.1,000 கோடி முறைகேடு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2025Updated:May 22, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1362466
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டாஸ்மாக்-கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகள் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் சோதனை நடத்தினர்.

    இந்நிலையில், இந்த முறைகேடுகள் தொடர்பாக டாஸ்மாக் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், அமலாக்கத் துறை விசாரணையை முடக்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுவதாகவும், ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கை நியாயமாகவும், எந்த இடையூறும் இன்றி விசாரிக்க வேண்டும் என்பதால் சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

    டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை விசாரிக்க மாநில அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஜி ஆர் சுவாமிநாதன் மற்றும் வி லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்குகளை வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்றுவது தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 41 வழக்குகளிலும் டாஸ்மாக் நிர்வாகம் தான் புகார்தாரர் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்க்கும் வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளிக்கப்படுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த தலைமை வழக்கறிஞர், வழக்கை முடிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். கீழமை நீதிமன்றம் தான் இதுசம்பந்தமாக முடிவெடுக்கும். இருப்பினும், அடுத்த விசாரணை வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான எந்த வழக்கையும் முடிக்க கோரி கீழமை நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்க்க மூன்று வாரங்கள் மனுதாரருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட 41 வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்கள் தள்ளிவைத்தனர்.

    ADMK DMK TASMAC 1000 crore scam TASMAC corruption TASMAC liquor scam TASMAC MD TASMAC முறைகேடு
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருக்குறளுக்கு வைரமுத்து எழுதிய புதிய உரை… காணொலியில் பெயர் வெளியீடு
    Next Article டாஸ்மாக் விவகாரத்தில் ED சோதனைக்கு தடை… அமலாக்கத்துறை வரம்புமீறி நடக்கிறது – உச்சநீதிமன்றம்
    Editor TN Talks

    Related Posts

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    தேர்தல் பரபரப்பு!. மார்ச்-ல் அடுத்தடுத்து 3 முறை தமிழகம் வரும் பிரதமர் மோடி!. திருச்சி, தஞ்சை டார்கெட்!

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    ஐசிசி டி20 தரவரிசை!. டாப் 10ல் நுழைந்த இஷான் கிஷன்!. அசைக்க முடியாத முதலிடம்!

    Trending Posts

    தவெக-வுக்கு நோ!. திமுகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்?. EPS, KAS-க்கு ஷாக்!. 

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026

    மாநிலங்களவை தேர்தல்!. காங்கிரஸுக்கு மேலும் ஒரு சீட்!. திமுகவின் வியூகம் என்ன?

    February 18, 2026

    விஸ்வரூபம் எடுத்த 7.5% இட ஒதுக்கீடு; ஆதாரத்தை திமுக காட்ட முடியுமா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    February 18, 2026

    வெல்லும் தமிழ்ப் பெண்கள்!. பிப்.23 முதல் வீடு வீடாக பிரசாரம்! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

    February 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.