Close Menu
    What's Hot

    உதயநிதி கைது விவகாரம் தீவிரம்.. தடை கோரி நீதிமன்றத்தை நாடிய திமுக..!!

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சில் காவல் துறை நடவடிக்கை

    அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அவதூறு கருத்துகளை நிறுத்துங்கள்… நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி… நீதிமன்றம் அதிரடி…
    Featured

    அவதூறு கருத்துகளை நிறுத்துங்கள்… நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி… நீதிமன்றம் அதிரடி…

    Editor TN TalksBy Editor TN TalksMay 23, 2025Updated:May 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    27 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொதுவெளியில் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி தம்பதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என ஆர்த்தி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கின் விசாரணை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    29

    இந்த நிலையில் திருமணம் நிகழ்ச்சி ஒன்றில் பாடகி கெனிஷா உடன் நடிகர் ரவி மோகன் கலந்து கொண்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது சம்பந்தமாக ஆர்த்தி காட்டமான அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    இதற்கு பதில் அளித்து நடிகர் ரவி மோகனும் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தப் பின்னணியில் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க மனைவி ஆர்த்திக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடிகர் ரவி மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருதரப்பும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.

    28 2

    மேலும் இருவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இரு தரப்பினரும் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    மேலும் ஏற்கனவே பொதுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை நீக்க வேண்டுமென இருதரப்பினருக்கும் அறிவுறுத்திய நீதிபதி, நடிகர் ரவி மோகன்-ஆர்த்தி தம்பதியர் குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுன்னூரில் விபத்து… திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி உயிரிழப்பு…
    Next Article அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனையை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் !
    Editor TN Talks

    Related Posts

    உதயநிதி கைது விவகாரம் தீவிரம்.. தடை கோரி நீதிமன்றத்தை நாடிய திமுக..!!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சில் காவல் துறை நடவடிக்கை

    August 4, 2026

    அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதயநிதி கைது விவகாரம் தீவிரம்.. தடை கோரி நீதிமன்றத்தை நாடிய திமுக..!!

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது…நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சில் காவல் துறை நடவடிக்கை

    அப்பாவுக்கு பதவி உயர்வா? அனிதா ராதாகிருஷ்ணனுடன் மோதலா? திமுகவில் அடுத்த கட்ட நகர்வு!

    த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தப் பேச்சு… உதயநிதியை கைது செய்யத் திட்டமா?… வீட்டை முற்றுகையிட்டுள்ள காவல் துறை…

    கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை!. கண்முன்னே உள்வாங்கிய கிணறு!. இடிந்து விழும் நிலையில் வீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.