Close Menu
    What's Hot

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மகப்பேறு விடுப்பு இனி தகுதிகாண் பருவத்தில் கணக்கில் கொள்ளப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு!
    தமிழ்நாடு

    மகப்பேறு விடுப்பு இனி தகுதிகாண் பருவத்தில் கணக்கில் கொள்ளப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு!

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250530 WA0000
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் அவர்கள் வெளியிட்டுள்ள அரசாணையில், அரசு பெண் ஊழியர்களுக்கு ஒரு முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணமான அரசு பெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓராண்டு கால சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, இனி அவர்களின் தகுதிகாண் (Probation) பருவத்திலும் கணக்கில் கொள்ளப்படும்.

    தற்போதுள்ள விதிகளின்படி, மகப்பேறு விடுப்புக் காலம் தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாததால், பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்தால், அவர்களின் தகுதிகாண் பருவம் முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இது அவர்களின் பதவி உயர்வையும், பணி மூப்பையும் பாதித்தது.

    இந்தச் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, மகப்பேறு விடுப்புக் காலம், பெண் ஊழியர்கள் தகுதிகாண் பருவத்தில் இருந்தாலும் வழங்கப்படும்.

    யாருக்கு இந்த சலுகை பொருந்தும்?

    இந்தச் சலுகை, சிறப்பு மற்றும் தற்காலிக விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தகுதிகாண் பருவப் பணிக்காலம் 28.04.2025 அன்றுடன் நிறைவடையாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 28.04.2025-க்கு முன்பு தகுதிகாண் பருவம் முடிவடைந்தவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது.

    இந்த அறிவிப்பு, அரசு பெண் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Leave Pregnancy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த தவறு” |Anbumani Vs Ramadoss
    Next Article தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
    Editor TN Talks

    Related Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    August 1, 2026

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    August 1, 2026

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    August 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தொகுதி மறுவரையறை தமிழகத்தை கடுமையாக பாதிக்கும் ” – ராகுல் காந்தி எச்சரிக்கை

    நீட் எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு: திராவிடர் கழகம் வழக்கு

    “தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல்” – ராகுல் காந்தி ஆதங்கம்

    பாரதிராஜா – பாக்யராஜுக்கு பிரம்மாண்ட அஞ்சலி: ஆகஸ்ட் 16-ல் ‘ராஜகோபுரங்களின் நினைவு உற்சவம்’

    கோவில் விழாக்களில் யானைகள் பயன்பாடு:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.