கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் வகையில், 2025-26 ஆம் கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவித்துள்ளார்.
உயர்கல்வித் துறை சார்பில் இக்கல்வியாண்டிலேயே (2025-2026) இந்தக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. அவை அமையவுள்ள இடங்கள்:
வேலூர் மாவட்டம் – கே.வி.குப்பம்
திருச்சி மாவட்டம் – துறையூர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் – உளுந்தூர்பேட்டை
திருவண்ணாமலை மாவட்டம் – செங்கம்
இந்த அறிவிப்பு, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்குவதோடு, அவர்கள் தங்கள் சொந்தப் பகுதியிலேயே தரமான கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.