Close Menu
    What's Hot

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கொடைக்கானல் கோடை விழா: பார்வையாளர்களை கவர்ந்த 24வது நாய்கள் கண்காட்சி !
    தமிழ்நாடு

    கொடைக்கானல் கோடை விழா: பார்வையாளர்களை கவர்ந்த 24வது நாய்கள் கண்காட்சி !

    Editor TN TalksBy Editor TN TalksMay 30, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dog
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக, கால்நடைத்துறை சார்பில் நடத்தப்பட்ட 24வது நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

    பிரையண்ட் பூங்காவில் கடந்த மே 24 ஆம் தேதி மலர் கண்காட்சியுடன் துவங்கிய கோடை விழா, இந்த வருடம் 9 நாட்கள் நடைபெறுவதாக சுற்றுலாத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. கோடை விழாவில் தினந்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இன்று 7வது நாள் கோடை விழாவில், கால்நடைத்துறை சார்பாக 24வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில், கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் செப்பர்டு, கிரேட் டேன், ராட்வீலர், டாபர்மேன், செயின்ட்பெர்னாட், ஹஸ்கி, ராஜபாளையம் உள்ளிட்ட 12 வகைகளைச் சேர்ந்த மொத்தம் 52 நாய்கள் கலந்துகொண்டன.

    இந்த நாய்கள் கண்காட்சி 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது. இதில் நாய்களின் குணாதிசயங்கள், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல், பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படைகளில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டு, கால்நடைத்துறை சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அனைத்துப் பிரிவுகளிலும் (ஓவர் ஆல்) டாபர்மேன் நாய் முதல் பரிசைத் தட்டிச் சென்றது.

    இன்று நடைபெற்ற நாய்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததுடன், நாய்களுடன் செல்ஃபியும் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.

    dog show kodaifestival Kodaikanal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇழிவாக பேசிய நடத்துநர்… பேருந்தை நிறுத்தி பெண்கள் சாலை மறியல்…
    Next Article பா.ம.க. உட்கட்சிப் பூசல்… அலுவலக முகவரியை மாற்றினார் அன்புமணி!
    Editor TN Talks

    Related Posts

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    June 1, 2026

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    June 1, 2026

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெற்றியில் நாமம், வாயில் கருப்பு துணி..!! நூதன ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!!

    கன்னட சூப்பர் ஸ்டாருடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்!. புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

    திருச்சி கிழக்கு வேட்பாளர் யார்? பரபரப்பாகும் அரசியல் களம் – பொது வேட்பாளர் நிறுத்தமா?

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.