Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…
    தமிழ்நாடு

    வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1952372 vaigai dam 01
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணை தேனி, மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து தென் மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது.

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இன்றி வைகைஅணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து அணைக்கான நீர்வரத்தும் மிகவும் குறைவாக இருந்து காணப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் , முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பாலும், வைகைஅணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று காலை வினாடிக்கு 949 கன அடியாக இருந்த வைகை அணைக்கான நீர்வரத்து தற்போது வினாடிக்கு 1887 கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்து 54.36 அடியில் இருந்து தற்போது 55.36 அடியை எட்டி உள்ளது.

    தற்போதைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 55.36 அடியாகவும்,அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1887 கன அடியாகவும், அணையில் நீர் இருப்பு 2770 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

    அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு வைகைஅணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருவதால் ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Farmers Relief Madurai News Tamil Nadu Dams Tamil Nadu Irrigation Tamil Nadu Monsoon 2025 Vaigai Dam Vaigai Dam Update Vaigai Reservoir Vaigai River Vaigai Water Inflow Water Levels Tamil Nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுல்லைப் பெரியாறு அணை – வெளியேற்றப்படுவது 1,600 கனஅடியா? 300 கனஅடியா?
    Next Article மதராஸி கேம்ப் மக்களுக்கு தமிழக அரசு உதவிக்கரம்…-Madarasi Camp in South Delhi
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.