Close Menu
    What's Hot

    திரையரங்குகளில் இன்று களமிறங்கியது ‘ஜனநாயகன்’: ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»பாகிஸ்தான் ஆதரவு செய்தி – அஸ்ஸாமில் 81 பேர் கைது
    இந்தியா

    பாகிஸ்தான் ஆதரவு செய்தி – அஸ்ஸாமில் 81 பேர் கைது

    Editor TN TalksBy Editor TN TalksJune 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1554243 arrest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்ட 81 பேர் அஸ்ஸாம் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.

    பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா உள்பட 6 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உதவியதாக இவர்களிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் சமூக வலைத்தள கணக்குகள் கடும் தணிக்கைக்கு உள்ளாகின. டெல்லி, மகாராஷ்ட்ரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்தவகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தேசவிரோத பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகமது தில்பர் உசேன் என்பவரை சோனிட்புர் போலீசார் கைது செய்துள்ளனர். ஹபிசுர் ரஹ்மான் என்பவரை காம்ரூப் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் சம்பந்தபட்ட பதிவுகள் குறித்தும், பாகிஸ்தானுடன் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் இதுவரை தேசவிரோத பதிவுகள் தொடர்பாக மொத்தம் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதுபற்றி அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஸ்வாஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது, நாட்டிற்கு எதிரான மனநிலையோடு யாரேனும் செயல்பட்டு வந்தால் தமது அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது! திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு…
    Next Article சபலம், சலனம், சந்தோஷம்… siren வெப்சீரிஸ்..
    Editor TN Talks

    Related Posts

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    July 22, 2026

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    July 22, 2026

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திரையரங்குகளில் இன்று களமிறங்கியது ‘ஜனநாயகன்’: ரசிகர்கள் கொண்டாட்டம்!

    ’ஜனநாயகன்’ ரிலீஸ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்… மெரினாவில் ஜொலித்த ஃப்ளையிங் எல்.இ.டி

    நீட் போராட்டம்: உண்ணாவிரதத்தை கைவிட சோனம் வாங்சுக்  புதிய நிபந்தனை!  

    ‘நீட்’ போராட்ட தடியடி: டெல்லி போலீசுக்கு உயர் நீதிமன்றம் கிடுக்கிப்பிடி!

    “மாணவர்களின் கோபத்தை ‘தீய சக்திகள்’ பயன்படுத்த விடக்கூடாது” – ப்ரீத்தி ஜிந்தா

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.