Close Menu
    What's Hot

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் !!!
    தமிழ்நாடு

    பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் !!!

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Waste collected
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 11 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டதாக வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    கோவை, அடுத்த பூண்டியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு இருந்து ஏழாவது மலையில் சிவன், சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த சிவனை தரிசிக்க தமிழக மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வன விலங்குகள் மற்றும் கால நிலை மாற்றத்தின் காரணமாக பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மட்டுமே வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் வெள்ளிங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நான்கு மாத மலையேற்ற காலம் கடந்த மே மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதை அடுத்து வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெள்ளிங்கிரி கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாலையோரம் வனப் பகுதியில் என ஆங்காங்கே வீசிச் சென்ற பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் கடந்த 4 மாதங்களில் மொத்தம் 10, 905 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டன. இந்த பிளாஸ்டிக் கழிவுகள் கோவையை தலைமை இடமாகக் கொண்டு ரீ கம்போஸ்ட், ரீ சைக்கிளிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் மறுசுழற்சி செய்யப்பட்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்காக மாற்றப்பட்டு உள்ளன. குடிநீர் பாட்டில்களை தனியார் நிறுவனம் மறுசுழற்சி செய்யும் கடினமாக இருக்கும் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் சாக்லேட் பேப்பர்கள் போன்ற பல அடுக்கு பிளாஸ்டிக்கை கூரைத்தாள்கள், கவரிங் தாள்கள் மற்றும் பிளாக் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து வனத் துறையினர் கூறும் போது பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில் உள்ள நுழைவாயில் மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் பிளாஸ்டிக் பாட்டிலுக்கு ரூபாய் 20 வசூல் செய்யப்படும், பின்னர் அந்த பாட்டிலை கொடுத்து விட்டு அந்த பணத்தை திரும்பி பெற்றுக் கொள்ளலாம், இதில் சில பக்தர்கள் மட்டுமே பாட்டிலை திரும்பி ஒப்படைத்து பணத்தை பெற்று சென்றனர். பலர் ஆங்காங்கே வனப் பகுதியில் பாட்டில்களை வீசி சென்று உள்ளனர் இதனை சேகரிக்கும் பணியில் வனத் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில் 11 டன் வரையிலான பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்பட்டு உள்ளது பக்தர்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்பதால் தான் தண்ணீர் பாட்டில்களை வனப் பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் பக்தர்கள் முறையாக பாட்டில்களை வனத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.

    11 tonnes plastic removed Tamil Nadu Coimbatore environmental news green initiative Coimbatore plastic free Tamil Nadu campaign plastic pollution Tamilnadu forests Poondi forest cleanup Tamil Nadu eco volunteers Velliangiri cleanup drive 2025 Velliangiri Hills plastic ban Velliangiri plastic waste removal
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜுலையில் நடிகர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம்…
    Next Article முறைகேடுகளில் ஈடுபட்ட ஐந்து காவலர்கள் பணியிடை நீக்கம் – கோவை ஆணையர் சரவண சுந்தர் நடவடிக்கை !!!
    Editor TN Talks

    Related Posts

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    June 20, 2026

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    June 20, 2026

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    3வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா!

    திமுக- அதிமுக கூட்டணி வைத்தால் என்ன தவறு? ஆர்.எஸ்.பாரதி அதிரடி!

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.