Close Menu
    What's Hot

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் ₹50 லட்சம் நகை கொள்ளை — தொழிலாளி கைது
    தமிழ்நாடு

    கோவையில் ₹50 லட்சம் நகை கொள்ளை — தொழிலாளி கைது

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2025 06 06 at 10.21.40 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூபாய் 50 லட்சம் நகை, பணம் திருட்டு, வீட்டில் உள்ள அலங்கார வேலை செய்யும் தொழிலாளியே போலீசார் கைது செய்தனர்.

    கோவை, குனியமுத்துவைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதி நடத்தி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் தங்கி உள்ளார். அவருடைய குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசித்து வருகிறார்கள், இந்நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த வீட்டு அலங்கார வேலை செய்யும் சுரேஷ் என்பவர் செல்லதுரைக்கு அறிமுகமானார். அவர் செல்லதுரையின் விடுதியில் சில அலங்கார வேலைகளை செய்தார். அது பிடித்துப் போனதால் செல்லதுரை சுரேஷை கோவை, குனியமுத்தூரில் உள்ள அவர் வீட்டில் சில வேலைகளை செய்யுமாறு கூறி உள்ளார். அதன்படி அவர் அவ்வப்போது குனியமுத்துக்கு வந்து செல்லதுரை வீட்டில் அலங்கார வேலை செய்து கொடுத்தார். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் பீரோவை திறந்து பார்த்தார். அதில் அதிக அளவில் பணம் மற்றும் நகைகள் இருந்தது.

    ஒரே நேரத்தில் திருடினால் தன் மீது சந்தேகம் வந்து விடும் என்பதால் கொஞ்சம், கொஞ்சமாக திருட திட்டமிட்டார். அதன்படி அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் கொஞ்சம், கொஞ்சமாக 40 பவுன் நகை, ரூபாய் 21 லட்சம் ஆகியவற்றை திருடி உள்ளார். அதன் மதிப்பு ரூபாய் 50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் பீரோவில் இருந்த நகை, பணம் திருடு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லதுரை. குனியமுத்தூர் காவல் துறையில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    மேலும் குனியமுத்தூர், உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தியதில் செல்லதுரை வீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக நகை பணத்தை கொள்ளை அடித்தது சுரேஷ் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த சுரேஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூபாய் 50 லட்சம் நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பம் இன்று முதல் ஆரம்பம்…
    Next Article சிவகளை அகழாய்வு பகுதி அருகே கல்குவாரி – ரத்து செய்து உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    June 21, 2026

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    June 21, 2026

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.