Close Menu
    What's Hot

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»அரசியல்»நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி! தமிழக அரசு மீது பாயும் எடப்பாடி பழனிசாமி..
    அரசியல்

    நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி! தமிழக அரசு மீது பாயும் எடப்பாடி பழனிசாமி..

    Editor TN TalksBy Editor TN TalksJune 7, 2025Updated:June 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Untitled 1 Recovered
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை புறநகர் பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்தில் பயணிகளுக்கு போதிய வசதிகள் செய்து தரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது குற்றஞ்சாட்டி உள்ளார். இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு..

    கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு. சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை! இன்று வரை “கிளாம்பாக்கம் பரிதாபங்கள்” ஓய்ந்த பாடில்லை.

    பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா? சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்க நகைக்கடன் – நிபந்தனைகளில் தளர்வு
    Next Article வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் இணையும் புதிய படம்..
    Editor TN Talks

    Related Posts

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    June 15, 2026

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    June 15, 2026

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    நடப்பாண்டில் ஓர் இலட்சம் பயணிகள் வருகை – இது புதுவை விமான நிலைய கணக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.