Close Menu
    What's Hot

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் மின்சார வாகனங்களுக்கு 9 புதிய சார்ஜிங் நிலையங்கள் – 2 மாதங்களில் பணிகள் தொடக்கம்!
    தமிழ்நாடு

    சென்னையில் மின்சார வாகனங்களுக்கு 9 புதிய சார்ஜிங் நிலையங்கள் – 2 மாதங்களில் பணிகள் தொடக்கம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    year end banner
    சென்னை மின்சார வாகனம், EV charging station Chennai, electric vehicle charging Tamil, Chennai EV infrastructure, மின்சார வாகன சார்ஜிங், Tamil Nadu EV news, Chennai smart city EV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் மின்சார வாகனங்களுக்கு முதற்கட்டமாக 9 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்கும் பணிகள் 2 மாதங்களில் பணிகள் துவங்க உள்ளது

    இடங்கள் தேர்வு செய்து சாத்திய கூறுகள் ஆய்வு செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி தகவல்

    அடுத்த 15 நாட்களில் டெண்டர் அறிவிக்கப்படும், அதன் பிறகு ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது

    காற்று மாசு, எரிபொருள் செலவு, தொழில்நுட்ப வசதிகள் என பல்வேறு காரணங்களால், மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் ஒரு லட்சத்து 73 ஆயிரம் மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மின்சார வாகன விற்பனை தொடர்பான தரவுகளின்படி, தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 482 மின்சார வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.

    அதில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 762 இருசக்கர வாகனங்களும், 7 ஆயிரத்து 770 கார்களும், ஆயிரத்து 14 லாரி உள்ளிட்ட மின்சார வாகனங்களும் விற்பனையாகி உள்ளன. தமிழ்நாட்டில் விற்பனையானதாக கூறப்படும் மின்சார வாகனங்களில், கணிசமானவை தலைநகர் சென்னையில் தான் பயன்பாட்டில் உள்ளன. போக்குவரத்து நெரிசல், குறுகலான சாலைகள் மற்றும் அதிகப்படியான பயன்பாடு போன்ற காரணங்களால், நகரவாசிகள் மின்சார வாகனங்களை அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், மின்சார வாகன பயன்பாடு அதிகரிப்பதை உணர்ந்துள்ள சென்னை மாநகராட்சி, ஒவ்வொரு மண்டலத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்காக, ஒவ்வொரு மண்டலத்திலும் இடத்தை தேர்வு செய்யும் பணிகளை மாநாகராட்சி நிர்வாகம் தொடங்கியது.

    மின்சார வாகனங்களில் பயணிக்கும் மக்களிடையே, குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு முன்பே சார்ஜிங் தீர்ந்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதனை போக்கும் வகையில் தான், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம், சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முடிவை எடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக சென்னையில் 9 இடங்களில் சார்ஜிங் நிலையம் அமைக்க ஒப்புதல் அளித்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி சென்னையில் முதற்கட்டமாக மின்சார சார்ஜிங் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்,

    1.பெசன்நகர், அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங்

    2.பெசன்ட்நகர் கடற்கரை பார்க்கிங்

    3.அம்பத்தூர், மங்கல் ஏரி பார்க்கிங்

    4.தி.நகர், மாநகராட்சி மைதானம் பார்க்கிங்

    5.தி.நகர், சோமசுந்தரம் மைதானம்

    6.செம்மொழி பூங்கா, ஆயிரம் விளக்கு

    7.மெரினா கடற்கரை பார்க்கிங்

    8 அண்ணாநகர், போகன் வில்லா பூங்கா

    9 மயிலாப்பூர், நகேஸ்வரா ராவ் பூங்கா

    இந்த திட்டத்தில் சேர்ந்து செயல்பட தனியார் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்கதக்கது.

    Chennai EV infrastructure Chennai smart city EV electric vehicle charging Tamil EV charging station Chennai Tamil Nadu EV news சென்னை மின்சார வாகனம் மின்சார வாகன சார்ஜிங்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபாஜக ஆட்சியின் 11 ஆண்டுகள்… சாதனைகளும்… கேள்விகளும்??
    Next Article கோவையில் மூதாட்டியை கடையை எடுக்கச் சொல்லிஅட்டூழியம் செய்த தி.மு.க நிர்வாகி
    Editor TN Talks

    Related Posts

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026

    அடுத்தடுத்து ரத்தாகும் விஜய்யின் பிரசாரம்!. கவரப்பேட்டை கூட்டமும் ரத்து!. தொண்டர்கள் ஏமாற்றம்!

    April 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இனி குழந்தைகளுக்கு டிஜிட்டல் பாக்கெட் மணி!. ‘GPay-ல் புதிய அம்சம்!. எப்படி செயல்படுகிறது?

    ஜனநாயகன் லீக் விவகாரம்!. நடிகை பூஜா ஹெக்டே வருத்தம்!. 

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    Trending Posts

    அடுத்த அதிரடி!. தலைமைச் செயலர், உள்துறை செயலாளர் மாற்றம்!. தேர்தல் ஆணையம் உத்தரவு!

    April 11, 2026

    தலைமைச் செயலர் மாற்றத்திற்கு கடும் எதிர்ப்பு!. தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர்.பாலு கடிதம்!

    April 11, 2026

    மத்திய கிழக்கில் ஓயாத போர்!. இதுவரை 2,000 பேர் மரணம்!. சிதைந்து கிடக்கும் நகரங்கள்!

    April 11, 2026

    6 மாதங்களில் அண்ணாமலைக்கு முதல்வர் பதவி; இதுதான் பாஜகவின் திட்டம்!. திருமா பேச்சு!

    April 11, 2026

    தேர்தல் முடிந்தவுடன் தான், திமுகவினர் தங்கள் சுயரூபத்தை காட்டுவார்கள்!. அண்ணாமலை அட்டாக்!

    April 11, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.