Close Menu
    What's Hot

    கனமழை எச்சரிக்கை..! தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்..!

    குரல்களின் மன்னன் பாலசுப்ரமணியத்தின் சாதனைகள் தெரியுமா?

    “பாடும் நிலா”வுக்கு இன்று 80வது பிறந்தநாள்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை
    தமிழ்நாடு

    சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்கும் வகையில் அரசாணை.. தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    castecertificate 1745304571
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்புத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    அந்த மனுவில். தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்த சலுகைகளையும் கேட்க போவதில்லை என குறிப்பிட்டிருந்தார்.

    சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்து எந்த உத்தரவும் இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், என் செந்தில்குமார் அடங்கிய அமர்வு, ஏற்கனவே திருப்பத்தூர், கோவை, அம்பத்தூர் தாசில்தார்கள் சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கி இருப்பதாக சுட்டிக்காட்டி, மனுதாரருக்கு அது போல் சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

    மேலும், சாதிய ரீதியிலான பாரபட்சத்தை தடுக்க வேண்டும் வேண்டும் என போராடி வரும் நிலையில், சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், சாதி மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி, உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு பரிந்துரைத்தனர்.

    நாட்டில் நிலவும் சாதி மத பாகுபாடுகளை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் சாசனம் சாதிய ரீதியிலான பாகுபாடுகளை தடை செய்துள்ள போதிலும், சமூக வாழ்க்கையில், அரசியலில், கல்வியில், வேலை வாய்ப்பில், சாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்டெர்லைட் சுற்றுப்புற மாசுவை அகற்றி சீரமைப்பது… 2 வாரங்களில் குழு அமைக்க அரசுக்கு உத்தரவு..
    Next Article திமுக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்..
    Editor TN Talks

    Related Posts

    கனமழை எச்சரிக்கை..! தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்..!

    June 4, 2026

    “பாடும் நிலா”வுக்கு இன்று 80வது பிறந்தநாள்..!

    June 4, 2026

    பள்ளிகள் திறப்பு: கோடை விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்த மாணாக்கர்கள்!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கனமழை எச்சரிக்கை..! தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்..!

    குரல்களின் மன்னன் பாலசுப்ரமணியத்தின் சாதனைகள் தெரியுமா?

    “பாடும் நிலா”வுக்கு இன்று 80வது பிறந்தநாள்..!

    முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து எம்.எஸ்.பாஸ்கர் வாழ்த்து!

    பள்ளிகள் திறப்பு: கோடை விடுமுறை முடிந்து உற்சாகத்துடன் வகுப்பறைக்கு வந்த மாணாக்கர்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.