Close Menu
    What's Hot

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொன்முடி பாணியில் ஓசி பஸ் என பேசிய திமுக எம்எல்ஏ
    தமிழ்நாடு

    பொன்முடி பாணியில் ஓசி பஸ் என பேசிய திமுக எம்எல்ஏ

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Screenshot 2025 06 11 190808
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசு கொண்டு வந்த மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி பஸ் என்று விமர்சித்து பேசியது நினைவிருக்கலாம். அதனால் அவர் பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளானார். இப்போது அதேபாணியில் திமுக எம்எல்ஏ ஒருவர் ஓசி பஸ் என்று பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு அருகே உள்ள மண்ணூத்து மலை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஆண்டிப்பட்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் திறந்து வைத்தார். மண்டபத்தை திறந்து வைத்து கூடியிருந்த கிராமமக்கள் மத்தியில் எம்எல்ஏ மகாராஜன் பேசினார்.

    அவர் பேசும்போது, நான் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்டு ஓட்டு கேட்டு வரும்போது இந்த பகுதிகள் அனைத்தும் வறண்டு பாலைவனம் போல் காட்சி அளித்தது. இந்த மகாராஜன் பதவி ஏற்றவுடன் மழை பெய்து உங்கள் பகுதி செழிப்படைந்தது. எப்போதும் வறட்சி ஏற்படும் ஆடி மாதத்தில் ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது என்றார்.

    மேலும் மகளிர் விடியல் பயணதிட்டத்தில், நான் முன்னரே கூறியது போல் பெண்கள் அனைவரும் அரசு பஸ்ஸில் ஏறி தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும். உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப் போகிறோம். அதில் பெண்கள் ஓசியில் பயணம் செய்யப் போகிறீர்கள். உங்கள் ஊருக்கு பஸ் விட்ட பின், எங்கள் ஊருக்கு ஏரோபிளேன் வேணும் என்றும் ரயில் வேணும் என்றும் கேட்டு விடாதீர்கள் என்றார்.

    பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று… pic.twitter.com/2Yeyb674TM

    — K.Annamalai (@annamalai_k) June 11, 2025

    ஏற்கனவே அமைச்சராக இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி விடியல் பணத்தை ஓசி பஸ் என்று இழிவாகப் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவும் பெண்களை ஓசி பஸ்ஸில் செல்லுங்கள், உங்கள் ஊருக்கு ஓசி பஸ் விட போகிறோம் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    DMK MLA controversial speech DMK MLA free bus remark Ponmudi speech style public transport comment Tamil Nadu politics news Tamil viral political video ஓசி பஸ் திமுக எம்எல்ஏ சர்ச்சை
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்..
    Next Article கோவையில் திருமணமான நான்காவது நாளில் புதுப்பெண் தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணை தொடக்கம்
    Editor TN Talks

    Related Posts

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    February 19, 2026

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    February 19, 2026

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026

    திமுகவுடன் முதல்முறை..! தேமுதிகவின் அதிரடி கூட்டணி நகர்வு!

    February 19, 2026

    தேமுதிகவுக்கு எத்தனை சீட்!. பிரேமலதா கொடுத்த அப்டேட்!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.