இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், இந்து முன்னணி அமைப்பு சார்பில் வருகிற ஜூன் மாதம் 22-ம் தேதி மதுரை ரிங் ரோடு, பாண்டிகோவில் அருகில் உள்ள அம்மா திடலில் பக்தியை வளர்க்க ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்த வளாகத்திற்குள்,
முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைக்கப்பட உள்ளது.

முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து வருகிற 10 ம் தேதி முதல் 22 ம் தேதி வரை பக்தர்கள் வழிபாடு நடத்த உத்தரவிட வேண்டும் என , மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.
ஆனால் அவர்கள் அனுமதி மறுத்து உள்ளனர்.

எனவே முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்
என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ,

‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாடு நடைபெறுவதற்கு 10 நாள் முன்னதாக வருகிற,மாநாடு நடைபெறும் வளாகத்தில்
முருக பெருமானின் அறுபடைவீடு திருக்கோவில்களின் தற்காலிக மாதிரி அமைப்புகள் அமைத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினால், அருகி ல் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படும்.

மேலும், ‘முருக பக்தர்களின் ஆன்மீக மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனு தற்போது வரை நிலுவையில் உள்ளது.
மாநாட்டிற்கு அனுமதி கோரிய மனுவில் சில வினாக்களாக கேட்டு உள்ளோம்.
ஆனால், இது வரை மாநாட்டுக்கு அனுமதி கேட்டவர்கள் பதில் அளிக்க வில்லை. இது குறித்து 9 ம் தேதிதான் முடிவு எடுக்க உள்ளோம்.
எனவே இந்த அரங்கு அ மைப்பதற்கு அனுமதி மறுத்து உள்ளோம் என தெரிவித்தனர்

இதை தொடர்ந்து மனுதாரர் தரப்பில்,
அறுபடை வீடு மாதிரி அரங்கு அமைத்து காலை , மாலை 2 மணி நேரம் வழிபாடு நடத்த உள்ளோம். எனவே அனுமதி வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இதை தொடர்ந்து நீதிபதி,

இதே பகுதியில் பிற மாநாடுகள் நடைபெற்று உள்ளது.
அதற்கு அனுமதி வழங்க பட்டு உள்ளது தற்போது மறுப்பது ஏன்

அறுபடை வீடு மாதிரி அரங்கு அமைத் து வழிபாடு நடத்த உள்ளனர்.
இதற்கு அனுமதி மறுத்து நீங்கள் கூறிய காரணங்கள் ஏற்புடையது அல்ல.

நாம் ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா, குடிமகன்களுக்கு உரிமை உள்ளதா,
காவல் துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்புடன் செயல்பட கூடாது என கூறிமனுதாரரின் மனு குறித்து, மதுரை மாநகர் காவல் ஆணையர், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9 ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version