ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குனரான மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் நடித்தள்ள திரைப்படம் ‘ஹேப்பி ராஜ்’. நகைச்சுவை கதைக்களத்தில் உருவாக உள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாக உள்ள ‘ஹேப்பி ராஜ்’ படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளார்.
இந்தநிலையில், ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.
தனது X தளத்தில் துல்கர் வெளியிட்டுள்ள பதிவில், அன்பு சகோதரர் ஜி.பி. பிரகாஷ் குமாருக்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார். ‘ஹேப்பி ராஜ்’ மிகவும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
