2025ம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் 31 படங்கள் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளன.
அந்த பட்டியலில் இந்திப் படமான ரன்வீர் சிங்கின் துரந்தர் படம் முதலிடத்தில் உள்ளது. அந்தப் படம், உலகளவில் ரூ.1,000 கோடிக்கும் மேலும், இந்தியாவில் மட்டும் ரூ.789 கோடியும் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. 2வது இடத்தில் விக்கி கெளசாலின் சாவா படம் உள்ளது. அந்தப் படம், இந்தியாவில் மட்டும் ரூ.717 கோடி வசூல் செய்துள்ளது.
3வது இடத்தில் காந்தாரா-சாப்டர் 1 (ரூ.741 கோடி), 4வது இடத்தில் சய்யாரா (ரூ.399 கோடி), 5வது இடத்தில் ரஜினிகாந்தின் கூலி (ரூ.338 கோடி), 6வது இடத்தில் மகா அவதார் நரசிம்மா (ரூ.299 கோடி), 7வது இடத்தில் வார் 2 (ரூ.283 கோடி) உள்ளன.
8வது இடத்தில் ஓ.ஜி. (ரூ.230 கோடி), 9வது இடத்தில் ஹவுஸ்புல் 5 (ரூ.218 கோடி), 9வது இடத்தில் ரெய்டு 2 (ரூ.206 கோடி), 10வது இடத்தில் சீதாரா ஜமின் பார் (ரூ.201 கோடி), 11வது இடத்தில் லோகா சாப்டர் 1 (ரூ.184 கோடி) படங்கள் உள்ளன.
அஜித்தின் குட் பேட் அக்லி 12வது இடத்தில் உள்ளது. அந்த படம் ரூ.181 கோடி வசூலித்துள்ளது.
தமிழ் படங்களில் கூலி, குட் பேட் அக்லி மட்டுமே ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்த படங்களின் வரிசையில் உள்ளன.
