புகையிலைப் பொருட்கள் மீதான வரியை அதிகரிக்கும் வகையில் கலால் வரி திருத்த மசோதவை கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
சிகரெட் புகைப்பது இனி அதிக செலவாக மாறக்கூடும். சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசின் புதிய மசோதா உற்பத்தி வரியை (Excise Duty) கடுமையாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது ரூ.18-க்கு கிடைக்கும் ஒரு சிகரெட், விரைவில் ரூ.72 வரை விலை உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவை சிலர் வரவேற்று, இது புகைப்பழக்கத்தை விட்டு விட உதவும் என்று நம்புகின்றனர். அதே நேரத்தில், சமூக ஊடகங்களில் கலவையான கருத்துகளும் எதிர்வினைகளும் வெளியாகி வருகின்றன.
ஒரு Reddit பயனர், சிகரெட் விலை உயர்வு குறித்து வெளியான சமீபத்திய தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை பதிவிட்டு, அரசின் இந்த முடிவை பாராட்டினார். “நானே புகைபிடிப்பவன் தான். இருந்தாலும் இந்த முடிவு நல்லதாகவே தோன்றுகிறது. இதனால் இந்தியாவில், குறிப்பாக மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் புகைப்பழக்கம் குறையும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில், இது எனக்கும் புகைப்பழக்கத்தை விட்டுவிட ஒரு வாய்ப்பாக இருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லியின் மோசமான காற்றுத் தரத்தைக் குறிப்பிட்ட பயனர் ஒருவர் தெரிவித்ததாவது, “எனக்கென்ன, நான் டெல்லியின் காற்றிலேயே வாழ்கிறேன், இலவசம் இலவசம் இலவசம்,” என்று எழுதினார். இதன் மூலம், தேசியத் தலைநகரில் உள்ள புகைப்பிடிப்பவர்கள் ஏற்கனவே மாசடைந்த காற்றுக்கு பழகிவிட்டதாகவும், சிகரெட்டுகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
புகைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் ஒரு மாற்றம் ஏற்படும் என்று சிலர் கணித்து, “இனி எல்லோர் கைகளிலும் vape (மின்னணு சிகரெட்) தான் காணப்படும்” என்று குறிப்பிட்டனர்.
அதிக விலைகள் சில புகைப்பிடிப்பவர்களைப் பழக்கத்தை விட்டுவிடவோ அல்லது மின்-சிகரெட்டுகள் போன்ற மாற்று வழிகளுக்கு மாறவோ ஊக்குவிக்கக்கூடும் என்றாலும், சட்டவிரோத விற்பனை அதிகரிப்பதற்கான அபாயமும் உள்ளது என்று சிலர் குறிப்பிட்டனர். ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இது மிகவும் மோசமானது! இது ஒழுங்குபடுத்தப்படாத சுகாதார விதிமுறைகளுடன் கூடிய போலியான பொருட்களுக்கு வழிவகுக்கும். மேலும் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
