ரஜினிகாந்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் ‘ஜெயிலர் 2’ தற்போது பரபரப்பாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் தலையாய நட்சத்திரமான நந்தமூரி பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.
சினிமா வட்டார தகவல்களின் படி, பாலகிருஷ்ணா இப்படத்தில் சிறப்புத் தோற்றமாக வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே தோன்ற உள்ளார். அதிலும் ஒரு மாஸ் ஃபைட் சீன் மற்றும் ஒரு ப்ளாக்பஸ்டர் ஷூட்டிங் செட் பின்னணியில் நடைபெறும் சிக்கலான காட்சி அடங்கும்.
இந்த 10 நிமிட காட்சிக்காகவே அவருக்கு ரூ.22 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தில், பாலகிருஷ்ணா மற்றும் ரஜினிகாந்த் இடையிலான கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஜெயிலர் 2’ திரைப்படம் மிகப் பெரிய நட்சத்திர கூட்டணியுடன் உருவாகி வரும் நிலையில், பாலகிருஷ்ணாவின் வருகை இந்த படத்துக்குச் சிறப்பே சேர்த்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.