தமிழகத்தில் அனுமதியின்றி உருவான மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடுவை அரசு மேலும் 12 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இதன்மூலம், இதுவரை அவகாசத்தை பயன்படுத்த முடியாத மனையர்கள் இன்னும் ஒரு வாய்ப்பு பெறுகின்றனர்.

அதன்படி, 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் அனுமதியற்ற மனைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு இருக்கலாம். அவ்வாறு விற்கப்பட்ட அல்லது விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள கடந்த ஆண்டு பிப்ரவரி 29 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இதனை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு நகர் ஊரமைப்புத் துறை இயக்குநரகம் கடிதம் எழுதியிருந்தது. எனவே, 2016-ஆம் ஆண்டு ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி. தேதி அல்லது அதற்கு முன்பாக பத்திரப் பதிவு செய்யப்பட்டிருந்த மனைகள் மற்றும் மனைப் பிரிவுகளை வரன்முறை செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே உள்ள விதிமுறைகளுக்கு உட்பட்ட வரன்முறைக் கான விண்ணப்பத்தை அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம் என்றும், மேலும், இந்தத் திட்டத்தில் இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

Share.
Leave A Reply

Exit mobile version