இந்த வருடம் வெளியான தமிழ் திரைப்படங்கள் மத்தியில் சசிகுமார், சிம்ரன் மற்றும் எம்எஸ் பாஸ்கர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அபிஷன் ஜீவ்னித் இயக்கினார். முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே நல்ல பெயரை சம்பாதித்த அவர் அடுத்த திரைப்படத்தை எப்பொழுது இயக்குவார் என்று ரசிகர்கள் காத்திருக்க, சத்தமே இன்றி மிக குறுகிய நாட்களில் கதாநாயகனாக ஒரு திரைப்படத்தில் நடித்தே முடித்து விட்டார்.

கடந்த மாதம் அவர் ஹீரோவாக களமிறங்கும் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதை தொடர்ந்து, திரைப்படத்தின் பிரமோஷன் வேலைகள் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க தொடங்கியுள்ளது. படத்தில் இவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த நடிகையான அனஸ்வரராஜன் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் பெயர் வித் லவ் ( With Love ) என்று வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்திற்கு லப்பர் பந்து, லவ்வர் படங்களுக்கு இசையமைத்த ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தின் டீசரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டது கூடுதல் சிறப்பு.

https://youtu.be/gNrYsSN0V9A?si=zxsQ1RuaJVSndDTt
திரைப்படத்தின் டீசரை பார்க்கையில், நல்ல காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளதென நன்றாகவே தெரிகிறது. ஏற்கனவே தான் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அபிஷன் நன்றாக நடித்திருந்த நிலையில், இந்த டீசரில் அவருடைய நடிப்பு இன்னும் சற்று நன்றாகவே இருக்கிறது. நிச்சயம் இத்திரைப்படம் அனைவராலும் ரசிக்கப்படும்படியான நல்ல ஒரு பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கப் போவதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
