கல்லீரல் பாதிப்பால் அவதியடைந்து வரும் நடிகர் அபினய்க்கு நடிகர் தனுஷ் பணம் கொடுத்து உதவியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபினய். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தவர், பின்பு டப்பிங்-கில் கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு அபினய் தான் குரல் கொடுத்திருந்தார். அதன் பின் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாததால் வருமனத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த அவர், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தான் அடைந்த துயரங்களை கூறி கவலை அடைந்தார். அதன் பின் தற்போது கல்லீரல் பாதிப்பால் அபினய் அவதியடைந்து வருகிறார். எலும்பும் தோலுமாய் அவரது புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது. சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அவர் அவதியடைந்து வந்துள்ளார்.

இதனையறிந்த சின்னத்திரை நடிகர் பாலா, அவரது நேரில் சந்தித்து ரூ.1லட்சம் ரூபாயை நிதியுதவியாக வழங்கியிருந்தார். இது தொடர்பாக வீடியோவும் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் நடிகர் தனுஷ் அபினய் மருத்துவ செலவுக்கு ரூ.5லட்சம் ரூபாய் கொடுத்து உதவி செய்துள்ளார். சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து, மீண்டும் அவர் சினிமாவில் நடிக்க வேண்டும் என பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version