சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அஞ்சான் 2 படம் குறித்த அப்டேட் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் கடந்த வாரம் மறு வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. ரீ ரிலீஸில் இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகின்றது. பல காட்சிகளை நீக்கிவிட்டு அஞ்சான் திரைப்படத்தை புது பொலிவுடன் ரீ எடிட் செய்து வெளியிட்டு இருக்கின்றார் லிங்குசாமி. அவர் எதிர்பார்த்ததை போல இப்படம் ரசிகர்களை ஈர்த்து வருகின்றது.

ஆனந்தம், ரன், சண்டைக்கோழி, பையா, வேட்டை போன்ற அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்த லிங்குசாமிமீண்டும் பார்மிற்கு வந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுப்பார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது அஞ்சான் ரீரிலீஸ் வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து அவர் மீண்டும் முன்னணி ஹீரோக்களை வைத்து படமெடுத்து வெற்றிகாண்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தநிலையில், அஞ்சான் 2 எடுக்க சொல்லி லிங்குசாமிக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இதுகுறித்து டிஸ்கஷனில் இறங்கிய லிங்குசாமி கதையை எழுத முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிற்து. அத்துடன் இதில் சூர்யாவுக்கு பதில் கார்த்தியை நடிக்க வைக்கவும் யோசித்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல் குறித்து லிங்குசாமி சார்பில் எந்த அப்டேடும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version