ஏவிஎம் ப்ரோடக்சன்ஸ் 1945 ஆம் ஆண்டு ஏ வி மெய்யப்ப செட்டியாரால் துவங்கப்பட்டது. பின்பு அவருடைய மகன் ஏவிஎம் சரவணன் 1958 ஆம் ஆண்டு இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு தலைமை ஏற்றார். அவர் தலைமையை ஏற்ற பின் ஏவிஎம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பல்வேறு வெற்றி படங்கள் வெளியாகின. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட மற்றும் ஹிந்தி என முன்னுருக்கும் மேற்பட்ட படங்கள் ஏவிஎம் புரோடக்சன்ஸ் பேனரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
நேற்று டிசம்பர் 4ஆம் தேதி ஏவிஎம் சரவணன் உடல் நல குறைவு காரணமாக தன்னுடைய 86 வது வயதில் இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்கு பல்வேறு துறை பிரபலங்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். அதில் சிவக்குமார் அவருடைய மகன் நடிகர் சூர்யா ஆகியோரும் அஞ்சலி செலுத்து வந்து இருந்தனர். அஞ்சலி செலுத்து வந்த இடத்தில் சிவக்குமார் மற்றும் சூர்யா ஆகிய இருவரும் கண்ணீர் மல்க தங்களது அஞ்சலியை செலுத்தினர்.
பின்பு பேசிய சிவகுமார், “சாதாரண பழனிச்சாமியாக இருந்த என்னை இன்று சிவக்குமார் ஆக மாற்றிய பெருமை ஏவிஎம் சரவணனுக்கு தான் சென்றடையும். அவர்தான் என்னை கதாநாயகனாக தமிழ் துறையில் அறிமுகம் செய்து வைத்தார். எனக்கு சிவகுமார் என்ற பெயரை கொடுத்த அவர் நினைவாக தான் என்னுடைய மகனுக்கு சரவணன் என்ற பெயர் வைத்தேன்”, என்று நினைவு கூர்ந்து கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். நடிகர் சூர்யா ஏவிஎம் தயாரிப்பில் பேரழகன் மற்றும் அயன் என இரண்டு வெற்றி படங்களில் நடத்திருக்கிறார். மேலும் ஏவிஎம் சரவணன் அவர்களுடைய முழு பெயர் ஏ.வி. சரவணன் சூர்யா மணி ஆகும். எப்படி பார்த்தாலும் நடிகர் சூர்யாவின் பெயர் ( நிஜ பெயர் மற்றும் திரை பெயர் ) ஏவிஎம் சரவணன் அவர்களுடைய பெயருடன் ஒத்துப்போவது குறிப்பிடத்தக்கது.
