கொரிய சுற்றுலா அமைப்பின் (KTO) சார்பில், கொரிய சுற்றுலாவிற்கான ‘கவுரவத் தூதராக’ பிரபல நடிகை பிரியங்கா மோகன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கொரிய கலாச்சாரத்தை இந்திய ரசிகர்களுடன் இணைக்கும் முக்கியப் பணியில் ஈடுபடத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன் இந்த நியமனம் குறித்துப் பிரியங்கா மோகன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய கொரிய அரசாங்கத்திற்கும், கொரிய சுற்றுலா அமைப்பிற்கும் (KTO) தனது மனமார்ந்த நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.
நடிகை பிரியங்கா மோகனின் திரைப் பயணத்தில் கிடைத்திருக்கும் இந்த உலகளாவிய அங்கீகாரம், அவரது திறமைக்குக் கிடைத்த மற்றொரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
