இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தின் போது நடிகர் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார், கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். வருடத்தில் 6 மாதங்களை சினிமாவுக்கும், 6 மாதங்களை ரேஸிலும் செலவழித்து வருகிறார் நடிகர் அஜித். அவரது குழுவினர் தொடர்ந்து பல கார் ரேஸில் கலந்து கொண்டு வெற்றி பெற்றும் வருகின்றனர். குறிப்பாக துபாயில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித்தின் அணி 3-வது இடத்தையும், பெல்ஜியத்தில் நடந்த பந்தயத்தில் இரண்டாவது இடத்தையும் பிடித்து அசத்தியிருந்தனர்.

அந்த வகையில் இத்தாலியில் நடைபெற்ற ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றிருந்த நிலையில், அவர் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கியது. பந்தயத்தின் போது அவருக்கு முன்னால் சென்ற கார் திடீரென டிராக்கின் குறுக்கே நின்றதால், அதன் மீது அஜித்தின் கார் மோதியது. இந்த விபத்தில் அஜித் காரின் இடதுபுற முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும் காரில் இருந்த அஜித்திற்கு காயம் எதும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version