தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை (ஜூன் 10) முன்னிட்டு, அவர் நடித்து வரும் ‘NBK 111’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, பாலகிருஷ்ணா- இயக்குநர் கோபிசந்த் மலினேனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘NBK 111’ என பெயரிடப்பட்டுள்ள படத்தை விருத்தி சினிமாஸ் பேனரில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரித்து வருகிறார். தமன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தநிலையில், பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை (ஜூன் 10) முன்னிட்டு ‘Entry of an Era’ என்ற பெயரில் வெளியான க்ளிம்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாலகிருஷ்ணாவின் வழக்கமான அதிரடி சண்டைக்காட்சிகளுடன் பின்னணி இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
‘NBK 111’ படத்தில் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, மஞ்சு மனோஜ், சரத்குமார், அபிமன்யு சிங் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படம் ஒரு வரலாற்றுப் பின்னணி கொண்ட அதிரடிப் படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
