நெட் பிளிக்ஸ்-ல் EL Chappo என்கிற வெப் சீரிஸ் இருக்கிறது இரண்டு சீசன் கொண்ட இந்தத் தொடரில் நார்கோஸ்-ல் வருவது போல ட்ரக் மாஃபியா தான்..

ஒரு சிறு புள்ளியில் தொடங்கும் ஒருவனின் குற்றச்செயல், ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஆகி அது வீழ்வது தான் இந்த மொத்தத் தொடர்களுமே, அது போக Pablo escobar என்ற தொடரும் இருக்கிறது. அதுவும் இந்த தொடரின் இன்னொரு முகம் என்று எண்ணுண்ணுகிறேன்..

இந்தப் போதை மாஃபியாக்கள் சினிமா அல்லது போதை மாபியாக்கள் எங்கிருந்து தொடங்குகின்றன என்று யோசித்தால் காட்பாதரில். டான் கார்லினியோவின் வீழ்ச்சி முன் அவரிடம் ஒரு ஆஃப்பர் வரும், இனி நாம் ஆள் கடத்தல் ஆயுத பேரம், போன்ற விஷயங்களை விட்டுவிட்டு போதை மருந்து கடத்துவோம். காரணம் அதில் வருமானமும், வளர்ச்சியும் அதீதம் என்பதாக இருக்கும். அதை கார்லினியோ திட்டவட்டமாக மறுத்துவிடுவார், அது நம் வீட்டுக் குழந்தைகளையும் எதிர்காலத் தலைமுறையும் பாதிக்கும் என்பதால் அதை மறுப்பார். மற்ற குழுக்களையும் செய்ய அனுமதிக்க மாட்டார், அதில் தொடங்குகிறது அவரின் வீழ்ச்சி..

உலகின் எந்த மாஃபியா படங்களை எடுத்துக் கொண்டாலும் அதில் காட்பாதரின் முதல்பாகம் இருக்கும். அதன் ஆன்மாவை தொடமால் சொல்ல முடியாது. போதை மாஃபியாக்களுக்கும் இது பொருந்தும்.

அதீதமான வருமானம், ஆட்பலம், அரசியல் பின்புலம், அதிகாரத்தின் முத்தம் என்று இந்த இருள் உலகில் கிடைக்காதது எதுவுமே இல்லை. கூடவே மாஃபியா குடும்பங்களைத் தாக்கக் கூடாது என்ற விதி காட்பாதர் படத்தோடு முடிவடைந்தது.. எதிரியை வீழ்த்த அவர்கள் எடுக்கும் கடைசி ஆயுதம் அவர்கள் குடும்பங்கள் தான்.. இதைப் புரிந்துக்கொண்டெ “அமெரிக்கா கேங்ஸ்டரில்” தலைவன் “நாயகன் டேனியல் வாசிங்டோன் தன்னையும் தன் குடும்பத்தையும் மறைத்தே வைத்திருப்பார், ஆனால் விதி வலியது அல்லவா தன் மனைவியின் ஆசைக்கு அவள் வாங்கித் தரும் விலையுயர்ந்த ஆடையை அணிந்துக்கொண்டு ஒரு பார்ட்டிக்கு செல்லும் போது அவரின் மீது போலிஸ் பார்வை விழும்..

இப்படியாக மாப்பியா உலகங்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறது..மாபியாக்களின் வீழ்ச்சிக்கு அழிவுக்கு அரசியல் ஒரு காரணம் என்றாலும் குடும்பங்களும் இன்னொரு காரணமாக அமைந்துவிடுகின்றன. இது சினிமா, சீரியல்களில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படித் தான்..

வெப் சீரிஸ்களில் இந்தத் இரு தொடருக்கு பின் மிக முக்கியமான இன்னொரு தொடர் இருக்கிறது. இரண்டு சீசன் கொண்ட அது ‘டாம்’ என்கிற வெப்சீரிஸ். அமேசான் பிரைமில் இருக்கிறது. மாபியா உலகங்களை தவிர்த்து அது ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளைச் சொல்லும் இன்னொரு மாஃபியா உலகம். இது இஸ்ரேல் மெக்ஸிகோவைத் தவிர்த்துப் பாரிஸில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை. இது காட்பாதர் மார்லின் இறப்புக்கு பின்னே நடைபெறுகிறது.. போதை தடுப்புப் பிரிவுக்கு ஒரு நீச்சல் வீரனின் உதவியுடன் தொடங்கும் கதை. அந்த நீச்சல் வீரன் தவிர்க்க முடியாத காரணத்தில் போதைத் தடுப்பு அதிகாரியாகிப் பல நாடுகளில் கிளைவிடும் குழுக்களை அழிக்க அல்லது தடுக்க முனையும் சூழலில் தவிர்க்கவே முடியாமல் தன் குழந்தைகளைக் கவனிக்க முடியாமல் போகிறது. மகன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி அதனால் அவனே ஒரு மாஃபியாவாவாக முயற்சிப்பது.

அந்த நீச்சல் வீரன் தன் மகளிடம் எனக்குப் பின் உனது தம்பியை நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பான். (அவனுக்கு கேன்சர்) அதற்கு அவள் சொல்வாள், நீ அவன் தந்தை நீ தான் அவனை கவனித்துக் கொள்ளவேண்டும் அது உன் பொறுப்பும் கூட என்று. ஒருவரின் பாரத்தை இன்னொருவர் மேல் திணிக்கும் இந்தியப் பெற்றோர்களின் அதே குரல் தான்..

மிக முக்கியமான தொடர் இது.. அப்படியே இந்தியா வந்தால் ஒன்று மாஃபியா முழுவதும் மதம் சார்ந்து அமைந்துவிடுகிறது.. இல்லையென்றால் அது எளிய மனிதர்களின் உலகம் என்றாகி விடுகிறது.. யோசித்துப் பாருங்களேன் பல கோடி வர்த்தகம் நடக்கும் ஒரு அண்டர்வேல்ட் தாதா எப்பொழுதும் அழுக்கு ஆடையுடனும், குளிக்காமலும் கொடூரமாகவா இருப்பான்.. நான் சொன்ன இந்த வெப்சீரியஸ்களில் அவர்கள் மற்றும் குடும்பங்கள் எப்போழுதும் கொண்டாட்டத்துடன் திளைக்கிறார்கள். விசாரணை படத்தில் கிஷோர் சொல்வது போல பணத்தை செலிபிரேட் பண்ணனும் என்பது தான்..

நம் வீரப்பனே மிகச் சிறந்த அண்டர்வேல்ட் தாதா தான் ஆனால் அவர் வாழ்க்கையை காட்டுக்குள்ளே வைத்து காட்டிக்கொண்டு இருக்கிறோம்.. அதைத் தாண்டி அந்த உலகத்தில் பயன் அடைந்த மனிதர்களைப் பேசவே மறுக்கிறோம். காரணம் நாம் நம் கலையின் மீது வைத்திருக்கும் அலட்சியம் அல்லது வீரப்பன் மீது வைத்திருக்கும் புனிதத்தன்மை. வீரப்பனின் வெப்சீரிஸை தான் சொல்கிறேன். இன்னும் மணல் மாபியா, சாராய மாஃபியா என்று நம் தளத்திலும் நிறைய அண்டர்வேல்ட் நிஜங்கள் இருக்கின்றன. அதை நடத்துபவர்கள், நம் அரசியல்வாதிகள் என்பதால் நமக்கும் துணிவில்லை, அவர்களுக்குப் பயமில்லை.

மற்ற நாடுகளில் மாஃபியாக்கள் வளர்ந்து அதிகாரத்தில் இருப்பவர்களை வளைப்பார்கள், ஆனால் அரசின் அதிகாரத்திற்குள் நுழைய மாட்டர்கள் அவர்கள் ஜனநாயகத்தை மதிக்கிறார்கள். ஆனால் நம் ஆட்கள் அரசியலுக்குள் வந்து மாஃபியாவாகிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version