கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் புதிதாக நடித்து வரும் படம் பற்றி பேசினார். அப்போது, அடுத்ததாக ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனங்களின் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாகவும், இன்னும் இயக்குநர் முடிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.


மேலும் கமலுடன் இணைந்து நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “ கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால், நல்ல கதாப்பாத்திரமும், கதையும் கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் இணைந்து நடிப்போம்” என கூறியுள்ளார். இதனால் மீண்டும் கமல்ஹாசன், ரஜினியை ஒன்றாக திரையில் பார்ப்போமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

தற்போது ஜெயிலர்2 படப்பிடிப்பில் நடித்து வரும் ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்து மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதில் கமல்ஹாசனும் இடம்பெறுவார் என கூறப்பட்ட நிலையில் ரஜினி இப்படி பேசி இருப்பது இருவரும் மீண்டும் ஒன்றாக நடிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version