அதிமுகவின் அதிருப்தி தலைவர்கள் யாரையும் அமித்ஷா இனி சந்திக்க மாட்டார் என்ற வாக்குறுதியை வெற்றிகரமாக பெற்றுள்ளதாகத் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது ஆதரவு நிர்வாகிகளும் உடன் இருந்தனர். 1மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த சந்திப்பில் அதிமுகவின் அதிருப்தி தலைவர்கள் யாரையும் சந்திக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வலியுறுத்தியதாகவும், அதற்கு அமித்ஷா தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் சொன்னதால் அவருக்கு எதிராக எடப்பாடி அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். இதனால் டெல்லிக்கு சென்ற செங்கோட்டையன், அமித்ஷாவை பார்த்து பேசினார். இதனை தொடர்ந்து நேற்று டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அவர் தரப்பிலும் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது இனி அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகளை பார்க்க வேண்டாம் என அமிஷாவுக்கு எடப்பாடி தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தனக்கு எதிரானவர்களை தடுக்கும் நோக்கத்தில் இப்படி ஒரு சூழலை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளதாகவும் அரசியல் வட்டார்த்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையே தனது இல்லத்தில் தன் ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக நிற்பதால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
