நடிகர் வைபவ், நடிகை அத்துல்யா ரவி உட்பட ஜான்விஜய், ராஜேந்திரன், கிங்க்ஸ்லீ உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் கோவை பிராட்வே திரையரங்கில் சென்னை Chenni City Gangsters திரைப்படம் மலைவாழ் மக்களுக்காக பிரீமியம் ஷோ திரையிடப்பட்டது.படத்தின் தயாரிப்பாளர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஆனைகட்டி மலைவாழ் மக்களுக்கு பிரிமியர் ஷோவாக படத்தை திரையிட்டனர்.

படம் முடிந்த பிறகு இத்திரைபடத்தின் நடிகர் வைபவ், நடிகை அதுல்யா, ஜான் விஜய் உள்ளிட்டோர் மலைவாழ் மக்களிடம் படம் குறுத்து கேட்டறிந்து கலந்துரையாடினர். அப்போது நடிகர் நடிகைகளை பார்த்த மலைவாழ் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். பின்னர் மலைவாழ் மக்களுடன் திரைப்பட குழுவினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வைபவ் அதிகமான நகைச்சுவை நடிகர்களுடன் இத்திரைப்படத்தை எடுத்துள்ளதாகவும் அனைவருக்கும் பிடிக்கும் படமாகவும் இது அமையும் என தெரிவித்தார். நடிகர் ஜான்விஜய் படத்தில் எனக்கு ஒரு புதிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள் அதை சரியாக செய்திருக்கிறேன் என நம்புவதாக கூறினார். மன அழுத்தம் அனைத்தையும் தூக்கிப்போட்டு விட்டு இரண்டு மணி நேரம் திரையரங்கில் வந்து படம் பார்க்கக்கூடிய அளவிற்கு நகைச்சுவை படமாக வந்திருக்கு என தெரிவித்தார். அரசியலுக்கு வருகிறீர்களா?? என்ற கேள்விக்கு நான் எதுக்கு அரசியலுக்கு வரப்போகிறேன் என நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

நடிகை அத்துல்யா, சினிமாவில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி எனவும் கோவையில் பிறந்து வளர்ந்த நான் என்னுடைய படம் கோவையில் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். சினிமாவில் அங்கீகாரம் கிடைப்பது கடவுளின் ஆசீர்வாதம் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version