சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் கூலி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றிருந்த நிலையில், அடுத்த படத்தை வெற்றிப் படமாக கொடுக்க வேண்டிய சூழலில் ரஜினிகாந்த் உள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்த ரஜினிகாந்த், கூலி திரைப்படத்தில் முழு மூச்சாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் நாகார்ஜூனா, உபேந்திரா, சோபின் சாஹிர், சத்யராஜ், சுருதிஹாசன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். அத்தோடு பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ளது. அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ’சிக்கிட்டு’ என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
அதனை தொடர்ந்து இரண்டாவது பாடலின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, பூஜா ஹெக்டே சிறப்பு நடனமாடியுள்ள ’மோனிகா’ என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
