தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா உலகில் கிரைம் திரில்லர் ஜானர் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி தமிழில் கடந்த மே மாதம் வெளியான லெவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில், நவீன் சந்திரா கதாநாயகனாக நடித்திருந்தார். அவரோடு சேர்ந்து ரியா ஹரி, ஷசாங்க், ரவி வர்மா, கீர்த்தி தாம ராஜு, அபிராமி, ‘ஆடுகளம்’ நரேன், திலீபன், ரித்விகா, அர்ஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
டி.இமான் இசையில் உருவாகி இருந்த லெவன் திரைப்படம் கடந்த ஜூன் மாதம் ஓடிடியிலும் வெளியானது. ஓடிடியில் அதிகளவு ரசிகர்களை ஈர்த்தது இப்படம். இறுதியில் ஹீரோவே சைக்கோ கொலைகாரன் என்ற டுவீஸ்ட் ரசிக்கும் படியாக இருந்தது. இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவனின் படப்பிடிப்பு காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
