2023-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை வென்றதற்காக இயற்கைக்கும், தன்னை நம்பிய சக கலைஞர்களுக்கும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு..

71-வது தேசிய விருதுகள் பட்டியலில் வாத்தி திரைப்படத்திற்காக எனக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மிகுந்த நன்றியும், சந்தோஷமும்.. தேர்வுக்குழுவினருக்கும், நடுவர்களுக்கும் என் நன்றிகள்.

இப்படத்திற்காக என்னை தேர்வு செய்த என் சகோதரர் தனுசுக்கு மனமார்ந்த நன்றி. பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை மற்றும் வாத்தி, இட்லி கடை என என்னை தொடர்ந்து ஆதரித்து இருதரப்பினரும் மேன்மை பெற வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

என்னை நம்பி இப்பொறுப்பை வழங்கிய இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு மிகுந்த நன்றி. வாத்தி முதல் லக்கி பாஸ்கர் வரையிலும் மேலும் அடுத்த படத்திலும் இணைந்து பணியாற்றும் அட்லூரிக்கு அன்புநிறை நன்றி.

என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள் நாகவம்சி மற்றும் திரிவிக்ரம் ஆகியோருக்கு நன்றி.

என் குடும்பத்தினர், என் இசைக்குழுவினர், பாடலாசிரியர்கள், தொழில்நுட்பக் குழுவினர், நண்பர்கள் மற்றும் என் ரசிகர்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்.

இயற்கைக்கு நன்றி

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version