இயக்குநர் அட்லீ தமிழை தாண்டி பான் இந்தியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அவர் எடுத்த ஜவான் திரைப்படம் ரூ.1,160கோடி வசூலை குவித்தது. தொடர்ந்து தற்போது தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். மறுபுறம் அல்லு அர்ஜூன் புஷ்பா பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவற்றில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக மாறியிருக்கிறார்.
இந்த இரு கூட்டணியும் இணையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது. சன்பிக்சர்ஸ் இப்படத்தை ரூ.800கோடியில் தயாரிக்கிறது. இப்படத்தில் தீபிகா படுகோனே ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர்களுக்கு வலை வீசி வருகிறாராம் அட்லீ.
அதாவது இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதே கதாபாத்திரத்திற்காக டுவைன் ஜான்சனையும் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.