சினிமாத் துறையில் உலக அளவில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது விழா. ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாக இவ்விழா நடைபெறும். அந்த வகையில், 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் மாதம் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறும். நிகழ்ச்சியை கோனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குவார் எனவும், விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கலந்து கொள்ள இந்திய திரைத்துறையில் இருந்து நடிகர்கள் கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் திரைத்துறையில் சிறப்பாக பங்காற்றிய 534 கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா, கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரன்வீர்தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்சிமா பாசு, ஆவணப்பட தயாரிப்பாளர் ஸ்மிருதி முந்த்ரா மற்றும் திரைப்பட இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version