தமிழ்நாட்டை ஒட்டிய யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதிகள் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட நிலையில் இதுவரை 16 முறை சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை.

இந்நிலையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி டெல்லி ஜந்தர் மந்திரில் புதுச்சேரி உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் நேரு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் புதுச்சேரியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். மேலும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வரங்கப்படவில்லை என்றால் போராட்டத்தை தீவுரப்படுத்தப்போவதாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்

அதேபோல, மாநில அந்தஸ்து விவகாரம் தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த ஒரு லட்சம் மக்களிடம் கையெழுத்து பெற்றுள்ள நிலையில் அதனை மத்திய அரசிடம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமன்ற உறுப்பினர் நேரு தெரிவித்துள்ளார் .

Share.
Leave A Reply

Exit mobile version