2025ம் ஆண்டில் 24,600 இந்தியர்களை நாட்டை விட்டு சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் வெளியேற்றி உள்ளன.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் அண்மையில் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கடந்த 12 மாதங்களில் 11,000 இந்தியர்களை சவுதி அரேபியா தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது. அதாவது, அந்நாடுதான் அதிகபட்சமாக இந்தியர்களை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளது.

இதேபோல், அமெரிக்காவில் இருந்து 3,800 இந்தியர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தனியார் நிறுவன  ஊழியர்கள் ஆவர்.

மேலும், மியான்மர் 1591, யுஏஇ 1469, பஹ்ரைன் 764, மலேசியா 1485, தாய்லாந்து 481, கம்போடியா 305 இந்தியர்களை தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளன.

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றப்படுவதற்கு முக்கிய காரணம், விசா காலம் முடிந்தும் கூடுதல் தங்கியிருந்தது, வேலை செய்ய அனுமதியில்லாது சட்டவிரோதமாக தங்கி வேலை செய்தது, வேலை அளிப்போரிடம்  தப்பியோட்டம், குற்றச் செயல்களில் ஈடுபட்டது ஆகியவையே ஆகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version