தனியார் பஸ்களை கான்ட்ராக்ட் எடுத்து இயக்குவதற்கு போக்குவரத்து கழகங்களுக்கு அனுமதி அளிப்பதென்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த திமுக அரசு, புதிதாக 11,900 பஸ்கள் வாங்கப்படுமென வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் இந்தாண்டு மார்ச் மாதம் வரையிலும் 3,500 பஸ்களை வாங்கியுள்ளது என்பது அரசிடம் இருக்கும் புள்ளி விவரங்கள் உறுதி செய்கின்றன.

ஆனால் அரசு அறிவித்ததுபோல, போக்குவரத்து கழகத்திற்கு தேவையான புதிய பஸ்களை வாங்குவதில் காலதாமதம் நிலவுகிறது. இதை மனதில் வைத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வாடகை அல்லது கான்ட்ராக்ட் அடிப்படையில் தனியார் பஸ்களை வாங்கி இயக்க அனுமதி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது வரை எஸ்இடிசி, டிஎன்எஸ்டிசி ஆகியவற்றுக்கு மட்டுமே இந்த அனுமதி தரப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கத்துடனேயே அரசு இந்த அனுமதியை அளித்துள்ளது. அதை தற்போது அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் அரசு தர தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபோல வாடகை, கான்ட்ராக்டில் எடுத்து தனியார் பஸ்கள் இயக்கப்பட்டாலும், டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் இருக்காது என சொல்லப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version