கும்பகோணம் அரசு மருத்துவமனையில் வைத்து 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் 7ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி. இவர், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினருக்கு துணையாக, மருத்துவமனையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை, அந்த வார்டுக்கு வந்த கும்பகோணம் வட்டம், நாககுடி, தெற்கு தெருவைச் சேர்ந்த ஓட்டுநர் ராமகிருஷ்ணன் (32), தூங்கிக் கொண்டிருந்த அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவரைப் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனில் ரகசிய இடங்களை பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version