தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சரை மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து பேசினார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வரும் முதலமைச்சர் விஜய்க்கு, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மக்களின் நலன்களை காக்கும் விதமாக மேற்கொள்ள உள்ள சிறப்பான சேவைக்கும், பணிகளுக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் முதலமைச்சரிடம் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார். இதற்கு முதல்வர் விஜய் தனது நன்றியை கூறியதாகவும் எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்தார்.

எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தில் அவரது அபாரமான நடிப்பை முதலமைச்சர் விஜய் வெகுவாகப் பாராட்டினார். அப்படத்திற்காக அவருக்குக் கிடைத்த தேசிய விருதுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நீண்ட நேரம் நீடித்த இந்த நெகிழ்ச்சியான சந்திப்பின் இடையே, நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் துணைவியார் திருமதி ஷீலா பாஸ்கர் அவர்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு முதல்வர் விஜய் நலம் விசாரித்துப் பேசினார்.

விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி, சிவகாசி, அழகிய தமிழ் மகன், காவலன், வேலாயுதம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version