அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அளவில் கலைப் படங்களில் தனித்துவத்தை பிரதிபலித்து புகழ்பெற்றவர் அடூர் கோபாலகிருஷ்ணன். தேசிய விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற அடூர் கோபாலகிருஷ்ணன் கடந்த 2016ல் பின்னேயும் என்ற மலையாளப் படத்தை இயக்கி இருந்தார்.
இந்தநிலையில், அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் மம்முட்டி நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை மம்முட்டி தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மம்முட்டி, அடூர் கோபாலகிருஷ்ணன் கூட்டணியில் வெளியான அனந்தரம், மதிலுகள், விதேயன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்கள்.
30 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
